சுமார் 150 வருடங்களுக்கு முன்பிருந்து தற்போது வரை பல்வேறு பரிமானங்களை பார்த்து வருகிறது, தமிழ் சினிமா. இருப்பினும், மனநலன் குறித்தும் மனநலனில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கோலிவுட்டில் வெகு சில படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அவை என்னென்ன படங்கள்? இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் கொண்டேன்:


செல்வராகவன் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், காதல் கொண்டேன். இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருப்பார். சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருப்பார். இதில், நட்புடன் பழகும் தனது தோழியை காதலிக்கும் தனுஷ், அவள் மீது பித்து பிடித்து இறுதியில் அவளை கடத்தியே சென்று விடுவார். இதற்கான காரணம், தனுஷிற்கு மன ரீதியாக பிரச்சனை இருக்கும். இது பலருக்கு தெரியாமலேயே இருக்கும். இறுதியில் தனுஷ் இறந்து விடுவார். தனுஷ் நடித்த முதல் மன நலன் தொடர்பான படம் இது. 


அந்நியன்:


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த படம், அந்நியன். இதில் சதா, விவேக், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர். இதில், கதையின் நாயகனாக வரும் அம்பிக்கு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி டிசார்டர் இருக்கிறது என்று கூறுவர். அதாவது, ஒருவர் இன்னொருவராக மாறுவதற்கு பெயர்தான் ஸ்ப்லிட் பர்சனாலிட்டி டிசார்டர். இதில், ஹீரோவிற்குள், ரெமோ அந்நியன் என இருவேறு குணாதிசயம் கொண்ட இரண்டு கதாப்பாத்திரங்கள் இருக்கும். உண்மையில் இந்த நோயினால் உலகில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நியன் படம் வெளியான இத்தனை ஆண்டுகளில் இது போன்ற வேறு ஒரு படம் இது வரை வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | லியோ to ரத்தம்- அக்டோபர் மாதம் வெளியாகும் தமிழ் படங்கள்..!


3:


ரசிகர்களை எப்போது பார்த்தாலும் கதற கதற அழ வைக்கும் படம், 3. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருப்பார். அவரது முன்னாள் மனைவியும் இயக்குருமான ஐஸ்வர்யா இந்த படத்தை இயக்கியிருந்தார். மனைவியை அளவு கடந்து காதலிக்கும் கணவன் திடீரென்று தனது உயிரை மாய்த்துக்கொள்கிறான். இதற்கு காரணம், அவனுக்கு இருக்கும் பைபோலார் டிசார்டர். இந்த மன நல பிரச்சனை தொடர்பான முழு விளக்கத்தையும் இப்படத்தில் கொடுத்திருப்பர். ஆனால் இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு முழுமையான தீர்வு என்ன என்பதற்கான பதில் இதில் இருக்காது. இந்த படம் அன்றைய இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 


கபாலி:


ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, பா.இரஞ்சித் இயக்கியிருந்த படம், கபாலி. இப்படம் 2016ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மலேசியாவில் வாழும் தமிழர்கள் குறித்த கதைதான் மெயினாக காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், அதை தாண்டியும் படத்தில் பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கும். போதை மருந்திற்கு அதிகமாக அடிமையாகி இருக்கும் இளம் தலைமுறையினர் இதனால் எப்படிப்பட்ட பின்விளைவுக்லை சந்திக்கின்றனர், அவர்களுக்கு உணர்வு ரீதியாக எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதையும் படத்தில் விளக்கியிருப்பர். இப்படம் 450 கோடி வரை உலகம் முழுவதும் கலெக்ட் செய்தது. 


சூப்பர் டீலக்ஸ்:


தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம், சூப்பர் டீலக்ஸ். இஜ்த படத்தில் மன நலன் தொடர்பான பல விஷயங்கள் குறித்து  அலசி ஆராயப்பட்டிருக்கும். சமூக கட்டமைப்புகள், பாலின பாகுபாடு, மதம், மூட நம்பிக்கை போன்ற பல தலைப்புகள் படத்தில் வெட்ட வெளிச்சமாக காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் சமந்தா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். 


மேலும் படிக்க | இதுவரை 2023ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ