சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சிவகார்த்திகேயனின் படம்! என்ன படம் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயனின் படம் ஒன்று, தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. அது என்ன படம் தெரியுமா?
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறிய இவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் அசுர வளர்ச்சியை கண்ட நடிகர்களின் பட்டியலில் இவருக்கு பெரிய இடம் உண்டு. இவரது படம் ஒன்று தற்போது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. அது என்ன படம் தெரியுமா?
சர்வதேச திரைப்பட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படம்..
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும், ’கூழாங்கல்’ புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி- அன்னா பென் நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படம், புகழ்பெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ்த்திரைப்படம் ஆகும்.
சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் உலகத்தளத்தில் புகழையும் ஒரு திரைப்படம் பெறப்போகிறது என்ற விஷயம் நமது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே பெருமையான ஒன்றாக இருப்பதாக சினிமா ரசிகர்கள் கருதுவதுண்டு. அந்த வகையில், வருகிற 2024 ஆம் வருடம் தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய 'கொட்டுக்காளி' திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறார். பெர்லினில் பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் திரையிட தேர்வாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் பெருமைமிகு படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க சூரி, அன்னா பென் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | சென்னையில் விமர்சையாக நடைபெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்!
இப்படம், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒரு திரைப்படம் தேர்வாகி இருக்கிறது என்பது உலக அளவில் ஒட்டுமொத்த திரைப்படத் துறையினருக்கும் பெருமை மிகு அடையாளமாக அமையும் என சினிமா விமர்சகர்கள் சிலரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் இது குறித்து கூறும்போது, ”நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர். மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது. இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்” என்றார்.
மேலும் படிக்க | ‘29 வருடங்கள் கழித்தும் வெட்கப்பட வைக்கிறார்’-குஷ்பூ நெகிழ்ச்சி பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ