பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா: சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் (Innovative international film festival ) 20 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 18, 2021, 10:55 AM IST
பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா: சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு title=

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் (Innovative international film festival ) 20 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. அதன் நிறைவு விழாவான நேற்று (17.10.21)  சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதில்ல் சிறந்த திரைப்படமாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் தேர்வு செய்யப்பட்டது. மாரி செல்வராஜ் இயக்கத்தில்  வந்த கர்ணன் திரைப்படம் கொடியங்குளத்தில் நடைபெற்ற காவல்துறையின் அத்துமீறல்களை மையமாக வைத்து  எடுக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது.

 மேலும், சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படம் பெற்றது. அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அதற்கான விருதை பெற்றார்.  ஆனால், இந்த படம் இதுவரை திரையரங்கில் வெளியாகாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ தோனிய தலனு சொன்னது குத்தமா?! தனுஷை திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

மேப்பிள் லீஃப்ஸ்  புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  இ.வி.கணேஷ்பாபு இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் சர்வதேச  விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சிருஷ்டி டாங்கே என்பவர் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். விரைவில்  கட்டில் தியேட்டர்களில்  திரைப்படும் என்று இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார். 

இயக்குநர், நடிகர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட இ.வி.கணேஷ்பாபு தமிழ் சினிமாவில் ஆட்டோகிராஃப், கற்றது தமிழ், ஆனந்தபுரத்து வீடு, மொழி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ALSO READ கேரளா மாநில விருதுகள் 2020: விருதுகளை அள்ளிய Kappela திரைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News