தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர், சௌந்தர்யா. இவரது உண்மையான பெயர் சௌமியா. இவர், 20 வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகையாக விளங்கியவர், ஹெலிகாப்டர் விபத்தில் 2004ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர், தான் இறப்பதற்கு முன்னர் இரண்டு விஷயங்களை தனது அண்ணியிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் அண்ணி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று திரையுலகின் முன்னணி நடிகை..


நடிகை சௌந்தர்யா, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இவரது அப்பா, கன்னடத்தில் மிகப்பெரிய தொழிலதிபர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தனது மருத்துவ படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்து வந்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக பிறமொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கினார். குறிப்பாக கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 12 வருடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர். ரஜினிகாந்துடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா ஆகிய படங்களிலும் நடிகர் கமல்ஹாசனுடன் காதலா காதலா ஆகிய படத்திலும் நடித்துள்ளார். 


மேலும் படிக்க | ‘மாமன்னன்’ படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் யார்..? முழு விவரம் இதோ..!


உயிரிழப்பு..


பிரபல நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா 2004ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அது, தேர்தல் நடைபெற இருந்த சமயம் என்பதால், அதற்கான கட்சிப்பணிகளிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சௌந்தர்யா தனது சகோதரருடன் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த விமானம் காந்தி க்ரிஷி விஜயன் கேந்த்ரா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. தரையிரங்குவதர்கு 100 அடி இருக்கும் போது இந்த விபத்து நேர்ந்தது. இன்று வரை இவரது சாவில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகிக்கின்றனர். 


அவர் கேட்ட இரண்டு பொருட்கள்..


சௌந்தர்யா, தான் இறப்பதற்கு முன்னர் தனது அண்ணனின் மனைவியிடம்  (அண்ணி) பேசியுள்ளார். அப்போது தனக்கு காட்டன் புடவையும் குங்குமமும் வேண்டும் என கேட்டுள்ளார். சௌந்தர்யாவின் அண்ணி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது நடிகை குறித்து உருக்கமாக பேசிய அவர், இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார். 


நடிகையின் சாவில் மர்மம்..


நடிகை சௌந்தர்யா உயிரிழக்கையில் அவருக்கு வயது 31. இவர் தான் உயிரிழப்பதற்கு ஓராண்டிற்கு முன்புதான் ஜி.எஸ் ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அரசியலில் களமிறங்கிய பிறகு அதில் அதிதீவிரமாக மக்களுக்கு நலத்தொண்டுகளும் செய்து வந்தார். பெற்றோர்களற்ற குழந்தைகளுக்காக 3 பள்ளிகளை திறந்து வைத்தவர் இவர். 90ஸ் கதாநாயகிகளிலேயே மக்கள் நலப்பணியாற்றுவதில் மிகவும் கவனம் செலுத்திய ஒரே நடிகை இவர் மட்டும்தான். சௌந்தர்யா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தது சில அரசியல் கட்சிகளுக்கு பிடிக்காததால் இந்த விபத்தை அவர்கள் ஏற்படுத்தியிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், இன்று வரை இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. சௌந்தர்யா, தான் இறக்கும் போது 7 மாத கர்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ‘என் கணவருக்கு யார் பதில் சொல்வது?’ முத்தக்காட்சியில் நடிக்காதது குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ