‘என் கணவருக்கு யார் பதில் சொல்வது?’ முத்தக்காட்சியில் நடிக்காதது குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..!

Priyamani: பிரபல நடிகை பிரியாமணி, முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்காதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2023, 01:37 PM IST
  • பிரியாமணி 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
  • சில ஆண்டுகளாகவே முத்தக்காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
  • இதற்கான காரணத்தை அவரே தெரிவித்துள்ளார்.
‘என் கணவருக்கு யார் பதில் சொல்வது?’ முத்தக்காட்சியில் நடிக்காதது குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..! title=

பருத்தி வீரன் படத்தில் முத்தழகு எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், பிரியாமணி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழ் படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். பருத்தி வீரன் படத்தில் நடித்திருந்தாலும், இவர் முதலில் தெலுங்கு மொழியில் வெளியான எவரே அட்டகாடு எனும் படம் மூலமாகத்தான் திரையுலகிற்குள் நுழைந்தார். தனுஷுடன் ‘அது ஒரு கனாகாலம்’ படத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு பெரிதும் கைகொடுக்காத இவரது சினிமா வாழ்க்கையில் பருத்தி வீரன் படம் மூலம் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. 

மேலும் படிக்க | ‘மாமன்னன்’ படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் யார்..? முழு விவரம் இதோ..!

பிரபல நடிகர்களின் ஜோடி..

தனது சினிமாவின் ஆரம்பக்கட்டத்திலேயே, தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் பிரியாமணி. பருத்தி வீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு  நடிகர்கள் பரத், விஷால், பிருத்விராஜ் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். கன்னட சூப்பர் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்தார். ‘இராவணன்’ படத்தில் விக்ரமிற்கு தங்கையாக நடித்திருந்த இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி இவரது ‘நடிகை’ முகத்தை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இன்னொரு முகத்தை காண்பித்தார் பிரியாமணி. 2013ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் “1234” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலித்தார். 

திருமணம்-சினிமா வாழ்க்கை..

தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த பிரியாமணி 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முஸ்தஃபா ராஜ் என்பவரை கரம் பிடித்தார். தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து வருகிறார், பிரியாமணி. இவர், திருமணம் முடிந்த பிறகு அதிகமாக முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் ஆகியவற்றில் நடிப்பது இல்லை. இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேள்வியெழுப்பப்பட்டது. அவர் அதற்கு அளித்துள்ள பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முத்தக்காட்சிகள் குறித்து பிரியாமணி..

முத்தக்காட்சிகளில் நடிக்காதது குறித்து பதிலளித்த பிரியாமணி, “நான் படங்களில் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன். அது வெறும் நடிப்புதான் என்பது எனக்கு தெரியும். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பது பிடிக்காது. மேலும், அப்படி செய்தால் என் கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்..” என கூறியுள்ளார். இது போன்ற முத்தக்காட்சிகளுடன் வந்த பல பட வாய்புகளை தான் நிராகரித்து விட்டதாகவும் பிரியாமணி குறிப்பிட்டுள்ளார். 

“குடும்பத்தினருக்கு சங்கடமாக இருக்கும்..”

முத்தக்காட்சிகளில் நடிக்காததற்கு தன் கணவர் குடும்பத்தினரையும் காரணமாக கூறுகிறார் பிரியாமணி. “நான் ஒரு படம் நடிக்கிறேன் என்றால் என் குடும்பத்தை சேர்ந்தவர்களும் என் கணவர் குடும்பத்தினரை சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்பார்கள். அப்போது முத்தக்காட்சியில் நான் நடித்திருந்தால் அது அவர்களுக்கு சங்கடமாக இருக்கும். என்னை பற்றி என் குடும்பத்தினர் தவறாக நினைப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் அப்படி ஏதேனும் நினைத்தாலும் வெளியே கூற மாட்டார்கள். ஆனாலும் நான் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதை தவிற்க்கிறேன்..” என்று கூறியுள்ளார், பிரியாமணி. 

பிரியாமணியின் அடுத்தடுத்த படங்கள்..

பிரியாமணி தன் கைவசம் பல படங்களையும் சில தொடர்களையும் வைத்துள்ளார். கடைசியாக கஸ்டடி படத்தில் நடித்திருந்த அவர், தற்போது கரிமாறா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். ஜவான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெய்டன், கொட்டேஷன் கேங்க் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அமேசான் ப்ரைம் தளத்தில் பிரபலமான தொடராக விளங்கும் தி ஃபேமெலி மேன் தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரம் இவர்தான். 

மேலும் படிக்க | ‘Don’t Touch’ ஆசையாக பேச வந்த ரசிகையின் செயலால் கோபமான ராதிகா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News