மெகா ஸ்டாருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் திரிஷா

திரிஷா சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

1 /6

த்ரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.   

2 /6

இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.   

3 /6

இதனிடையே அருண் வசீகரன் இயக்கும் 'தி ரோட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், 'சார்பட்டா பரம்பரை' பட பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.   

4 /6

இதையடுத்து ‘தூங்கா நகரம்’, 'சிகரம் தொடு' படத்தை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுபோக அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் படத்திலும் தனுஷின் 50வது படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   

5 /6

இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'ப்ரோ டாடி' படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க அவரது மனைவி கதாபாத்திரமான மீனா கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.  

6 /6

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் த்ரிஷா. இதைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து மீண்டும் இணையவுள்ளதாகத் தெரிகிறது.