பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்!
கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி -8ம் தேதி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) (lata mangeshkar) லேசான கொரோனா அறிகுறிகளுடன், தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை (Covid 19) தொடர்ந்து அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்தனர். ICU-வில் இருக்கும் அவருக்கு டாக்டர் பிரதித் சம்தானி மற்றும் அவரது மருத்துவர்கள் குழு சிகிச்சை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
ALSO READ | எச்சரிக்கை மணியாக இருக்கும் செயல்பாடுகள்! எளிதில் Corona பாசிட்டிவ் ஆகலாம்
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நேற்று டாக்டர் பிரதித் சம்தானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி "அவர் இரண்டரை நாட்களாக வென்டிலேட்டர் உதவியில்லாமல் இருக்கிறார், இருப்பினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதால் தான் வென்டிலேட்டர் உதவியில்லாமல் நாங்கள் அவரை தனியாக வைத்துள்ளோம், ஆனால் அவரது உடல்நிலை ICU-வை நாடுகிறது, அதனால் உடல்நிலை ஓரளவு தேரியபோதிலும் அவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
1942ம் ஆண்டு தனது 13வது வயதில் இசை பயணத்தை தொடங்கியவர், பல்வேறு இந்திய மொழிகளில் 30,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். அவரது இத்தனை வருட இசை பயணத்தில், "அஜீப் தஸ்தான் ஹை யே", "பியார் கியா தோ தர்னா கியா", "நீலா அஸ்மான் சோ கயா" மற்றும் "தேரே லியே" போன்ற பாடல்கள் மறக்கமுடியாத நல்ல நினைவலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க இவர் இந்தியாவின் 'மெலடி குயின்' என்றும் போற்றப்படுகிறார். இவர் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதும் பெற்றவர். மேலும் இவர் பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்று இன்றளவும் பலரால் போற்றப்பட்டு வருகிறார்.
ALSO READ | லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவர்கள் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR