கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) வியாழன் அன்று நிபந்தனையுடன் கூடிய சந்தை அனுமதியை வழங்கியுள்ளது.
"மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) இப்போது COVAXIN மற்றும் Covishield தடுப்பூசிகளை அவசரகால சூழ்நிலைகளில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் என்ற நிலையில் இருந்து வயது வந்தோருக்கான சாதாரண புதிய மருந்து என்ற வகையிலான அனுமதியை சில நிபந்தனைகளுடன் மேம்படுத்தியுள்ளது" என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.
இருப்பினும், சந்தை ஒப்புதல் என்பது மருந்துக் கடைகளில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று அர்த்தமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் இருந்து Covishield மற்றும் Covaxin தடுப்பூசிகளை வாங்க வேண்டும். தடுப்பூசி தரவு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் DCGI அமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் CoWIN செயலியிலும் தரவு புதுப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Omicron: Immunity அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வம் கல்லீரலை டேமேஜ் செய்யும்..!!
முன்னதாக, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் கோவிட்-19 தொடர்பான நிபுணர் குழு, கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த, வழக்கமான சந்தை அனுமதியை வழங்கலாம் என பரிந்துரைத்தது.
The @CDSCO_INDIA_INF has now upgraded the permission for COVAXIN and Covishield from restricted use in emergency situations to normal new drug permission in the adult population with certain conditions.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 27, 2022
விலையை பொறுத்தவரை ஒரு டோஸுக்கு ரூ. 275 என்ற அளவிலும், கூடுதல் சேவைக் கட்டணமாக ரூ. 150 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR