Latest News Aavesham Telugu Remake : மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் பகத்பாசில் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு ஆவேசம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் தெலுங்கு ரீ-மேக் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிப்பு அரக்கனின் ஆவேசம் :


கேரளாவில் மட்டுமன்றி, தென்னிந்திய அளவில் அதிகளவில் ரசிகர்களை கொண்டவர், பகத் பாசில். மலையாளத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரான இவர், தனது 20வதாவது வயதில் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள், இவரை நடிப்பு அரக்கன் என செல்லப்பெயர் வைத்தனர். வேலைக்காரன் படத்தில் முதன் முதலாக வில்லனாக நடித்த இவர், தொடர்ந்து சில படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கினார். 


ஆவேசம் திரைப்படம்  ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் மலையாள படங்களில் ஒன்று ஆவேசம். ஹீரோயின் இல்லாத படமான இது, ஜாலியான திரைக்கதையில் உருவானது. இதில் பகத் பாசில் ரங்கன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பேசிய ‘எடா மோனே’ எனும் டயலாக்கும் பிரபலமானது. 


தெலுங்கு ரீமேக்:


எப்போதுமே, மலையாளம் அல்லது பிற மொழிகளில் வெளியாகும் படங்கள் நன்றாக இருந்தால், அது வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆவது வழக்கம். அந்த வகையில், ஆவேசம் திரைப்படம் விமர்சனத்திலும், மக்களின் வரவேற்பிலும், வசூலிலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், இதனை தெலுங்கில் ரீமேக் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Fahadh Faasil : தளபதி விஜய்யுடன் நடித்த பகத் பாசில்! வைரலாகும் புகைப்படம்..


ஹீரோ யார்? 


ஆவேசம் படத்தின் தெலுங்கு ரீமக்கில் சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு மொழியில் இருக்கும் மாஸ் ஹீரோக்களுள் ஒருவரான இவர், அரசியல் பலம் மற்றும் ரசிகர் பலம் பொருந்தியவர். இதுவரை தமிழ் மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து அதை வெற்றி பெறவும் செய்திருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள், எதற்காக ஓடுகிறதோ இல்லையோ..இவர் முகத்திற்காகவாவது ஓடும் என கூறப்படுகிறது. 



இவரிடம் ஆவேசம் படத்தில் ரங்கன்னாவின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறித்து பேச்சு அடிப்பட்டு வருவதை தொடர்ந்து இவர் இதற்கு சரியானவராக இருப்பாரா என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது. ஒரு சில ரசிகர்கள், ஆவேசம் ரீ-மேக்கில் ரங்கனாக நடிக்க இவரை விட வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்று கூறி வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 


எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 


ஆவேசம் திரைப்படம் தெலுங்கில் ரீ-மேக் ஆவதற்கு முன்னர் ஓடிடியில் பார்க்க விரும்பினால் உடனடியாக அமேசான் ப்ரைம் தளத்திற்கு சென்று பாருங்கள். அந்த தளத்தில் இப்படத்தை மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பார்க்கலாம். அதே போல, ஆவேசம் படத்தின் இந்தி வர்ஷன் ஹாட்ஸ்டார் தளத்தில் இருக்கிறது. இதையும் ஓடிடியில் பார்க்கலாம். 


ஆவேசம் திரைப்படம் உள்பட இந்த ஆண்டின் தொடகத்தில் வெளியான மலையாள படங்கள் பல நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றன. மஞ்சுமெல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரேமலு உள்ளிட்ட படங்கள் நல்ல ஹிட் அடித்தை தொடர்ந்து ஆவேஷம் திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படம், உலகளவில் சுமார் ரூ.150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை பெற்றதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ