Thani Oruvan 2 Villain : தமிழ் சினிமாவில் தனி இடம் பெற்ற தனித்துவமான படங்களுள் ஒன்று, தனி ஒருவன். 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்ற படங்களுள் ஒன்றாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனி ஒருவன்:


இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் திரைப்படம், வெளியான போது அந்த வருடம் மெகா ஹிட் அடித்த படங்களுள் ஒன்றாகும். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஹீரோவையும் வில்லனையும் ஒரே தராசில் வைத்து, காண்பித்த படம் இது. 


இந்த படத்தின் பெயரை கேட்ட உடனே, “தீமைதான் வெல்லும்…” என்ற பாடல்தான் மனதில் ஓடும். அப்படி, படத்திற்கு பின்னணி இசையமைத்திருந்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், இந்த படத்தின் இசையில் புகுந்து விளையாடியிருந்தார். 


மேலும் படிக்க | ‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..


தனி ஒருவன் 2:


தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில், ஜெயம் ரவியும் மோகன் ராஜாவும் நடித்திருந்தனர். இதில், நடிகர் ஜெயம் ரவி 10 வருடங்களுக்கு முன்பு எப்படியிருந்தாராே, அப்படியிருக்கிறார். இந்த படத்தின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 


இவர்தான் வில்லனா? 


தனி ஒருவன் படத்தின் முதல் பாகத்தில், அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தின் இறுதியிலேயே அவர் உயிரிழந்து விடுவது போன்ற காட்சி அமைந்திருந்தது. இதனால், இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கப்போவது இல்லை என உறுதியானது. இந்த நிலையில், ஒரு பாலிவுட் நடிகர் இதில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் வேறுயாருமில்லை, நடிகர் அபிஷேக் பச்சன்தான்.



நடிகர் அபிஷேக் பச்சனை, நல்ல நடிகராக பல படங்களில் பார்த்திருக்கிறோம். வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தவும் இவர் தவறியதில்லை. இந்த நிலையில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் வில்லன் இவர்தான் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இவர், நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Dharsha Gupta: ஆங்கில படங்களை மிஞ்சும் கிளாமர்..அசத்தும் தர்ஷா குப்தா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ