‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..

Good Bad Ugly Movie Update : அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் புதிய கதாநாயகி ஒருவர் நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 23, 2024, 01:20 PM IST
  • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் குட் பேட் அக்லி
  • அஜித் குமார் ஹீரோவாக நடிக்கிறார்
  • ஜோடியாக, டாப் நடிகை ஒருவர் நடிக்கிறார்
‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை.. title=

Good Bad Ugly Movie Update : கோலிவுட் திரையுலகின் டாப் நடிகராக இருப்பவர், அஜித் குமார். 53 வயதானாலும், இன்னும் கின்னென்று ஹீரோவாக நடித்து வரும் அவர் பல இளம் தலைமுறை இயக்குநர்குளடன் கைக்கோர்த்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் சைன் செய்த படம்தான், குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். 

குட் பேட் அக்லி திரைப்படம்:

தமிழ் திரையுலக இயக்குநர்கள் பலர், தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை தாங்கள் எழுதிய கதைகளில் நடிக்க வைத்து அழகு பார்ப்பதை வாடிக்கையாக்கி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல் ஹாசனை வைத்து ஃபேன் பாய் சம்பவம் செய்ததை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரனும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார். நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகரான இவர், அவரை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை, சிம்புவை வைத்து இயக்கினார். அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்ப, 100 கோடி வசூலுக்கும் மேல் சென்று பாக்ஸ் ஆபிசிலும் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி, நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்த இவர், அதற்கு சில நாட்களுக்கு பின்பு அஜித் குமாரை சந்தித்து தன் படத்தின் கதையை கூறியதாக கூறப்படுகிறது. கதை பிடித்துப்போகவே, இருவரும் ஒன்றாக இணைந்து தற்போது பணியாற்றி வருகின்றனர். 

மேலும் படிக்க | கோலிவுட்டில் மவுசு இல்லை.. பாலிவுட்டில் ஆரவார வரவேற்பு.. டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா

படப்பிடிப்பு தொடங்கியது!

அஜித் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பும், பிற வேலைகளும் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான், குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பித்துள்ளது. இம்மாதம் (மே) 10ஆம் தேதி, ஹைதராபாத்தில் பூஜையுடன் பட வேலைகள் தொடங்க, அதில் படத்தின் நாயகன் அஜித் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் முக்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நாயகி இவர்தானா? 

குட் பேட் அக்லி படத்தின் வேலைகள் ஒரு பக்கம் பாேய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கதையின் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக, நயன்தாராவிடம்  காய் நகர்த்தி வருகிறதாம், படக்குழு. ஏற்கனவே நடிகர் அஜித் குமாருடன் பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த நயன், இந்த படத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Good Bad Ugly

இவரும் நடிக்கலாம்..

அஜித் குமாருடன் நயன்தாரா நடிக்கவில்லை என்றால், இன்னொரு டாப் நடிகையை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் யோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வேறுயாருமில்லை, த்ரிஷாதான். அஜித்துடன் அதிகமுறை ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை இவர்தான். இவர், ஏற்கனவே அஜித்திற்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்திருக்கும் நிலையில், குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News