Actor Ajith Kumar Returns To Chennai :  நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குட் பேட் அக்லி:


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பெயர் குட் பேட் அக்லி. தேவி பிரசாத் இசையமைக்கிறார். அஜித்தின் 63-வது படமான இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. அங்கு 2 சண்டைக் காட்சிகளையும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது.


விடாமுயற்சி:


இதையடுத்து ஜூன் 20-ம் தேதி ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. அஜித் வாகனத்தில் சாகசம் செய்யும் காட்சிகள் உள்ளிட்டவை இணையத்தில் வேகமாக பரவின. ‘விடாமுயற்சி’யில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | விடாமுயற்சி ஓடிடி உரிமை குறித்து அறிவிப்பு!


இந்நிலையில் நடிகர் அஜித் குமார் விடா முயற்சி படப்பிட்டிப்பில் கலந்து கொண்டு இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்பொழுது விமான நிலையத்தில் அவருடைய ரசிகர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். அஜித், தனக்கான பங்கு காட்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. 


கேலிக்குள்ளான ஃபர்ஸ்ட் லுக்:


விடாமுயற்சி படத்தின் அட்பேட் தராமல், ரசிகர்களை இழுத்தடித்து வந்தது படக்குழு. இறுதியில், சில நாட்களுக்கு முன்னர் அஜித் பேக்கை தூக்கிக்கொண்டு ரோட்டில் நடப்பது போன்ற போஸ்டரை ஃபர்ஸ்ட் லுக் ஆக வெளியானது.



இதைப்பார்த்த ரசிகர்கள், இதற்கு ஒன்றும் வெளியிடாமலேயே இருந்திருக்கலாம் என கேலி செய்தனர். மேலும், சில சேட்டை பிடித்தவர்கள் மீம்ஸாக இதை பதிவிட்டு கலாய்த்தனர். இதையடுத்து, படமாவது நன்றாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்திருக்கிறது. 


மேலும் படிக்க | ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் தளத்தில் விபத்து! மரண பயத்தில் அஜித்-ஆரவ்! திக் திக் வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ