Vidaa Muyarchi OTT : விடாமுயற்சி பட உரிமையை வாங்கிய பிரபல ஓடிடி தளம்! எது தெரியுமா?

Vidaa Muyarchi OTT : அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை ஒரு பிரபல நிறுவனம் பெற்றிருக்கிறது. அது எந்த நிறுவனம்? எந்த தொகைக்கு படம் விற்கப்பட்டது? இதோ முழு விவரம்!

Vidaa Muyarchi OTT : மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. அஜித் குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் சேர்ந்து ஆரவ், அர்ஜுன் உள்ளிட்ட பலரும் இணைந்திருக்கின்றனர். இதில், த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை இந்தியாவின் பிரபல தளம் ஒன்று பெற்றிருக்கிறது. 

1 /8

அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது விடாமுயற்சி திரைப்படம். இந்த படத்தில் அவருடன் இணைந்து ஆரவ், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். 

2 /8

அஜித்தின் துணிவு படம், கடந்த ஆண்டில் வெளியான போது விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், இது குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாவதில் கடும் தாமதம் ஏற்பட்டது. 

3 /8

விடாமுயற்சி படம், ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, படக்குழுவினர் சில ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கியிருக்கின்றனர்.

4 /8

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித்தும் ஆரவ்வும் இருந்த கார் விபத்துக்குள்ளானது. இது குறித்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

5 /8

அஜித், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜர்பைஜான் பறந்திருக்கிறார். அவர் அப்போது எடுத்துக்கொண்டிருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

6 /8

இயல்பாகவே ஒரு பைக் ரேசரான அஜித், இந்த படத்திலும் அப்படி ஒரு காட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

7 /8

அஜித், குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8 /8

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஓடிடி உரிமை தொகை மட்டும் சுமார் ரூ.75 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.