Actor Dhanush Next Movie : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், தனுஷ். மாஸ் நடிகர் என்பதை தாண்டி, நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராகவும் வலம் வருகிறார். தன்னுடன் ஏற்கனவே பயணித்த கலைஞர்கள் மட்டுமன்றி, புதிதாக திரைத்துறைக்கு வந்திருப்பவர்களுடனும் சேர்ந்து வேலை பார்த்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனுஷின் சமீபத்திய படங்கள்..


நடிகர் தனுஷ், கோலிவுட்டில் மட்டுமன்றி பாலிவுட்டை தாண்டி இப்போது ஹாலிவுட்டிற்கும் சென்றிருக்கிறார். தமிழில் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருந்தார். இதற்கடுத்து, தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்துடன் சேர்த்து, தனுஷ் நடித்து வரும் படம் ராயன். இந்த படத்தை, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் வருகிறார். இவருடன் இணைந்து சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இதன் ரிலீஸ் தேதியும் தற்போது நெருங்கி வருகிறது. 


மேலும் படிக்க | அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசம் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?


போர்த்தொழில் பட இயக்குநர்..


கடந்த ஆண்டு வெளியாகி பெரிய ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, போர்த்தொழில். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து சரத்குமார் நடித்திருந்தார். இதனை புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். படம், நல்ல வெற்றியை பெற்றதற்கு காரணம் இதன் நேர்த்தியான திரைக்கதை. தனது முதல் படத்திலேயே இது போன்ற கதையை தேர்ந்தெடுத்தற்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் விக்னேஷ் ராஜாவை பாராட்டினர். 


இளம் இயக்குநரான இவர், அதற்கடுத்து எந்த படத்தை இயக்குகிறார் என்பது குறித்த அப்டேட்டுகள் எதையும் வெளியிடாமல் இருந்தார். இந்த நிலையில், இது குறித்த தகவல் ஒன்று திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. 



தனுஷும் விக்னேஷ் ராஜாவும் விரைவில் ஒரு படத்தில் கைக்கார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒன்லைன் கதையை தனுஷிடம் விக்னேஷ் ராஜா கூறியதாகவும், இதனால் ஈர்க்கப்பட்ட தனுஷ் இது குறித்து யோசிப்பதாக கூறியிருப்பதாகவும் பேசப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் க்ரைம் த்ரில்லர் “போர் தோழில்” வசூல் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ