Actor Prashanth Salary In The GOAT Movie : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி கோட் (The Greatest Of All Time). விஜய் ஹீராேவாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி கோட்:


சினிமாவிற்கு விரைவில் டாடா சொல்ல இருக்கும் நடிகர் விஜய்க்கு, கடைசி படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது ‘தி கோட்’. இந்த படத்தில், தந்தை-மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்க, அவருக்கு ஜோடிகளாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியாேர் வருகின்றனர். அவர்கள் மட்டுமன்றி ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, வைபவ், பிரேம்ஜி, அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். 


தி கோட் படத்தை, சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கின்றனர். சென்னை, ஐதராபாத், கேரளா, ரஷ்யா உள்பட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான டிரைலர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்த விவரங்களை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்தார். 


விஜய்யின் சம்பளம்..


கோலிவுட் திரையுலகின் டாப் ஸ்டாராக வலம் வரும் விஜய், பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கடைசியாக நடித்த ‘லியோ’ திரைப்படத்திற்கு சுமார் ரூ.120 கோடி வரை சம்பளமாக பெற்றிருந்தார். ஆனால், இந்த சம்பளம் ‘தி கோட்’ படத்தில் அப்படியே பன்மடங்காக உயர்ந்திருக்கிறது. சுமார் 400 கோடியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், விஜய்யின் சம்பளம் மட்டும் 200 கோடியாம். இது குறித்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி “விஜய்யை நம்பி 400 கோடி பணம் முதலீடு செய்தாலும் அதில் லாபம் பார்க்க முடிகிறது” என்று கூறியிருந்தார். விஜய்யின் சம்பள விவரத்தையும் அவரே குறிப்பிட்டிருந்தார்.


மேலும் படிக்க | ‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!


டாப் ஸ்டார் பிரசாந்தின் சம்பளம்?


தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் “பெரிய நடிகராக வருவார்” என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர், பிரசாந்த். 90கள் மற்றும் 2000 கால கட்டத்தில் வெளியான இவரது திரைப்படங்கள் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. இதனால் இவருக்கு பலர் ‘டாப் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் கொடுத்தனர்.



தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாகவும், படங்கள் சரியாக ஓடாத காரணத்தினாலும் சில ஆண்டுகள் சினிமாவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்த நிலையில், தி கோட் பட வாய்ப்பு கிடைத்தது அவருக்க பெரிய கம்-பேக் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “விஜய்க்கு போட்டி நடிகராக வர வேண்டியவர், இன்று அவருடைய படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறாரே..” என்று பிரசாந்தின் ரசிகர்களும் ஏக்க பெருமூச்சுகளை விட்டு வருகின்றனர். 


பிரசாந்த், தி கோட் படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், அவரது கதாப்பாத்திரம் முக்கியமானது என்பதால் அவருக்கு ரூ.5 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | 51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம்! மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ