‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!

Latest News Actor Prashanth Salary In Andhagan : நடிகர் பிரசாந்த், அந்தகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 10, 2024, 02:17 PM IST
  • பிரசாந்த் கம்-பேக் கொடுத்துள்ள படம் அந்தகன்
  • நீண்ட வருடங்களுக்கு பிறகு ரிலீஸாகியிருக்கிறது
  • வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு?
‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்! title=

Latest News Actor Prashanth Salary In Andhagan : தமிழ் திரையுலகில், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். 90களில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்த இவர், சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகிய அவர் தற்போது மீண்டும் கம்-பேக் கொடுத்திருக்கிறார்.

பிரசாந்தின் கம்-பேக்..

இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகன், பிரசாந்த். நடிகராக மட்டுமன்றி, தொழிலதிபராகவும் இருந்த இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகைருந்தார். தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். ஜோடி, ஸ்டார், வின்னர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் இரு காலத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து மொத்தமாக காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்தான் என்று கூறப்பட்டது. தற்போது, அவர் நடித்திருக்கும் அந்தகன் படம் பல ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு வெளியாகி இருக்கிறது. 

ஆகஸ்டு 9ஆம் தேதியான நேற்று, படம் வெளியானது. நடிகர் பிரசாந்த் இதில் சிறப்பாக நடித்திருப்பதாகவும் அவருக்கு கம்-பேக்காக இப்படம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அந்தகன் திரைப்படம்:

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற, ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்தான் அந்தகன். இந்த படத்தின் இந்தி வர்ஷனில் ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடிக்க, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வந்தனர். இதே கதையை தமிழில் இயக்க, அதில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

இந்த படம், எப்போதாே எடுத்து முடிக்கப்பட்ட நிலையிலும், நிதி பிரச்சனை, படக்குழு பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஒரு வழியாக இப்படம், நேற்று வெளியானது. இதை பார்த்த பத்திரிக்கையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

பிரசாந்தின் சம்பளம்..

நடிகர் பிரசாந்த், திறமையான நடிகர்குள் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்தார். ஆனால், மார்கெட் இழந்த பிறகு தனது சம்பளத்தை அவர் குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்தகன் படத்தின் ப்ரமோஷன் விழாவின் போது, அவரிடம் அந்தகன் படத்தில் அவரது சம்பள விவரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், இந்த படமே தனக்கு சம்பளம்தான் என்று கூறினார். இதற்கு அர்த்தம், இந்த படத்தில் நடிப்பதையே தனக்கு சம்பளமாக அவர் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் இப்படத்திற்கு சம்பளம் வாங்கனாரா இல்லையா என்பது தெரியவில்லை. 

கோட் படத்தில் சம்பளம்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் உருவாகி வருகிறது. விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. இதில் பிரசாந்தும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்க, அவர் 6 முதல் 7 கோடி சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் அவரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் இத்தனை படங்கள் ரிலீஸா? இதோ முழு லிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News