தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?

The GOAT Movie Pre Booking : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 31, 2024, 12:01 PM IST
  • தி கோட் ப்ரீ புக்கிங்.
  • செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
  • இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி உள்ளது.
தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா? title=

Actor Vijay The Goat Movie Pre Booking: தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருக்கிறது, தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி உள்ளது. 

தி கோட் திரைப்படம்:
தமிழ் திரையுலகின் ஜாலியான இயக்குநராக அறிப்படுபவர், வெங்கட் பிரபு. இவருடன் நடிகர் விஜய், முதன் முறையாக ‘தி கோட்’ (The Greatest Of All Time) படத்தில் கைக்கோர்த்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அனைத்து கிராஃபிக்ஸ் மற்றும் டெக்னாலஜி பணிகளும் நடைப்பெற்று முடிந்தது.

மேலும் படிக்க | The GOAT Movie Title First Choice : GOAT படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர்! வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்..

தி கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 80களில் பிரபல நாயகனாக இருந்த மைக் மோகன், தி கோட் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவரை இதுவரை நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரங்களில் பார்த்திராத ரசிகர்களுக்கு, தி கோட் படத்தில் இவரது கேரக்டர் புதுமையான முகத்தை காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது ரிலீஸ்?
புதிதாக “தமிழக வெற்றிக்கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்து தனது 69வது படத்தில் நடித்து முடித்தவுடன் முழு நேரமாக அரசியலில் இறங்க இருக்கிறார். இந்த நிலையில், ஜாலியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த இவர், தி கோட் படத்தின் கதையை ஓகே செய்தார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை அடுத்த வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருப்பதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

தி கோட் ப்ரீ புக்கிங்:
இந்நிலையில் தற்போது மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது. அதன்படி தற்போது வரை GOAT திரைப்படம் உலகளவில் செய்துள்ள ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Nepotism In The GOAT Movie : நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News