மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..
Rajinikanth Discharged Viral Video : நடிகர் ரஜினிகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
Rajinikanth Discharged Viral Video : தமிழ் திரையுலகின் முன்னணி நடிராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்னர் அடிவயிற்றில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் ரஜினிகாந்த், கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியன்று, நள்ளிரவில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதாகும் ரஜினிகாந்த், அடிவயிற்றில் உள்ள ரத்த நாணங்களில் ஏற்பட்ட கட்டி காரணமாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதையடுது்து சில மருத்துவ பரிசாேதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த ரஜினிகாந்தின் உடல் நலம் தேறியதால், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த், நேற்று (அக்டோபர் 3) இரவு 11 மணியளவில் அவரது காரில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பியிருக்கிறார்.
வைரல் வீடியோ:
நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முகத்தில் மாஸ்க் உடன் காரில் அமர்ந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், வீடியோ எடுப்பவரை பார்த்தபின், கையெடுத்து கும்புடுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டிய பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர்.
வேட்டையன் ரிலீஸ்:
நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக நடித்திருக்கும் படம் வேட்டையன். டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு, இந்தி நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். இவர்கள் மட்டுமன்றி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இதில், அமிதாப் பச்சனுக்கு கீழ் வேலை செய்யும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாப்பாத்திரத்தில் வரும் இவர், இந்த வயதிலும் எதிரிகளை எகிறி அடிக்கும் காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றிருந்தது. ஜெய்பீம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுத்த டி.ஜே.ஞானவேல், இந்த படத்தின் மூலமாகவும் தன் பெயரை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது.
கூலி:
ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி வரும் படம், கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடித்து வருகின்றனர். செளபின் சாஹிர், உப்பேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படம், அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், இன்னும் சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ