)
Rajinikanth Health Update: நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு இதயம் தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி வெளியில் வந்ததும் பலரும் ரஜினிகாந்த் உடல்நிலை சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பிரச்சனை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது தீவிர கண்காணிப்புக்கு பிறகு ரஜினிகாந்த் ஐசியூவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ரஜினிகாந்த் கண்காணிப்பில் இருப்பதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. ரஜினியின் ரசிகர்கள் படத்திற்காக காத்து கொண்டு இருந்த நிலையில், திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திங்கட்கிழமை இரவு ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் செரிமான பிரச்சனை காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பிறகு, மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 73 வயதாகும் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அதே சமயம் தனது உடல் நிலையிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதற்கு முன்பு 2020ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
ரஜினிகாந்த் இன்று மாலை அல்லது இரவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் மருத்துவமனை தரப்பில் இருந்து இன்னும் அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை குடும்பத்தினருடன் ஆலோசனை செய்த பின்பு மருத்துவமனை சார்பாக வெளிவர இருக்கிறது. "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என்று முதல்வர் முக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். “ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. திட்டமிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை" என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ