ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! காதலரை கரம் பிடிக்கிறார்..அவர் யார் தெரியுமா?
Ramya Pandian To Marry Her Boy Friend : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Ramya Pandian To Marry Her Boy Friend : தமிழில், வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான கதாநாயகியாக விளங்குகிறார், ரம்யா பாண்டியன். இவரது திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ரம்யா பாண்டியன்:
ஜோக்க்ர் படத்தில் மல்லிகாவாக நடித்து பலரை அசர வைத்தவர், ரம்யா பாண்டியன். முன்னாள் திரைப்பட இயக்குநர் துரை பாண்டியனின் மகளான இவர், முதன் முதலில் அறிமுகமான படம் டம்மி டப்பாசு. 2015ஆம் ஆண்டில் வெளியான இப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், அடுத்து நடித்த ஜோக்கர் படத்தில் கதாப்பாத்திரத்துடன் ஒன்றி நடித்து, சிக்ஸர் அடித்தார் ரம்யா. இந்த படத்தை அடுத்து, சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்திலும் நடித்தார்.
தொடர்ந்து நடிகையாக வரவேற்பு பெற்று கொண்டிருந்த இவருக்கு, பெரிய மேடையாக அமைந்தது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தை வென்றார். அடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்ட இவர், ஆரம்பத்தில் மக்களின் வரவேற்பினை பெற்றார். இதையடுத்து, அந்த சீசனின் 3வது ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றார். ரம்யா பாண்டியன், பிக்பாஸிற்கு வந்த பிறகு மக்களுக்கு அவர் மீது இருந்த பிம்பம் மாறியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், படங்களிலும் அவ்வப்போது நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் நடித்த நன்பகல் நேரத்து மயக்கம் படம் வெளியானது. அடுத்து, இடும்பங்காரி எனும் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமன்றி, முகிலன் மற்றும் ஏக்ஸிடண்டல் ஃபார்மர் அண்ட் கோ உள்ளிட்ட வெப் தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
காதல்..
திரையுலகில் இருக்கும் நடிகர்களையும் நடிகைகளையும் சுற்றி எப்பாேதும், காதல் அல்லது திருமண வதந்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கும். ஒரு சில சமயங்களில் அது உண்மையாகலாம், பல சமயங்களில் அது பொய்யாகலாம். தற்போது, அதே போன்ற ஒரு தகவல்தான் ரம்யா பாண்டியன் குறித்து வெளியாகி இருக்கிறது. அவர், ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘பிக்பாஸ்’ புகழ் ரம்யா பாண்டியனின் கண்கவர் கவர்ச்சி க்ளிக்ஸ்!
காதலர் யார்?
ரம்யா பாண்டியன், காதலிப்பதாக கூறப்படும் நபர், பஞ்சாப்பை சேர்ந்தவராம். இவரது பெயர், லவெல் தவான். இவர், ஒரு பிரபல யோகா மையத்தில் யோகா மாஸ்டராக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த இடத்தில் கிளாஸிற்கு செல்லும் போது ரம்யா பாண்டியன் அவரை சந்தித்தகாவும் பின்னர் நாளடைவில் இது காதலாக மாறியதாகவும் குறப்படுகிறது.
திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி..
ரம்யா பாண்டியன்-லவெல் தவான் திருமணம், மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் நடைபெற இருக்கிறதாம். இந்த திருமணம் ரிஷிகேஷில் நடைபெற இருப்பதாகவும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, ரம்யா பாண்டியனின் தங்கையும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் திருமணம் நடைப்பெற்றது. சொந்த ஊரில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் வெகு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல ரம்யா பாண்டியனின் திருமணமும் நடக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..’ அழகு நாயகி ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ