Latest News Sivakarthikeyan Purananooru Movie Actress : தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர் சிவகார்த்திகேயன். இவர், சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருடன் ஜோடியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன்:


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, துணை கதாப்பாத்திரமாக வளர்ந்து, இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவிற்கு வந்த சுமார் 13 ஆண்டுகளில் மடமடவென வளர்ந்து விட்ட இவர், இப்போது மக்கள் பலரது மனங்களில் இடம் பிடித்த கதாநாயகனாக இருக்கிறார். 


ஆரம்பத்தில் கிராமத்து இளைஞர் கதாப்பாத்திரங்களிலும், ஜாலியான கேரக்டர்களிலும் நடித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக சீரியஸான கதை உள்ள படங்களையும், கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி, அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு படம்தான், புறநானூறு. 


சூர்யா-சுதா கொங்கரா கூட்டணியில் உருவான ‘சூரரைப் போற்று’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இருவரும் புறநானூறு படத்திலும் இணைவதாக அறிக்கையை வெளியிட்டனர். ஆனால், இந்த படத்தின் பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. இதையடுத்து, இந்த படத்தின் வேலைகள், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக, சூர்யா அறிவித்தார். இதற்கு பிறகுதான், சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?


சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் 23 வயது நடிகை?


தற்போது தென்னிந்திய திரையுலக அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர், ஸ்ரீலீலா. 23 வயது இளம் நடிகையான இவர், தெலுங்கில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவர், இன்னும் தமிழ் படங்களில் நடிக்காத இவர், புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த இவர், அப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் மூலம் பிரபலமானார். இவரை, தமிழில் தி கோட் படத்திலேயே ‘மட்ட’ பாடலில் நடனமாட வைக்க அப்படத்தின் குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டதால், அந்த வாய்ப்பு த்ரிஷாவிற்கு சென்றதாம். 



முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரபல இயக்குநர்..


புறநானூறு திரைப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒரு பிரபல இயக்குநரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை, லோகேஷ் கனகராஜ்தான். சில படங்களையே இயக்கி இருந்தாலும் அவற்றில் கார்த்தி, கமல்ஹாசன், விஜய் என பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து வெற்றி இயக்குநராக வலம் வரும் இவர், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை உருவாக்கி வருகிறார். மாஸ்டர் படத்தில் காமியோ ரோலில் நடித்த லோகி, ஸ்ருதிஹாசனுடன் ‘இனிமேல்’ பாடலில் நடித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் அவர் நடிக்க இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சிவகார்த்திகேயனின் புதிய படம்:


சிவகார்த்திகேயன், அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அவருடன் இணைந்து சாய் பல்லவி நடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ