Thangalaan Vaazhai Demonte Colony 2 OTT Release : இந்தியாவில், ஓடிடி தளங்களின் வருகை பன்மடங்காக பெருகி விட்டது. இதனால், தியேட்டர்களில் ஓடி முடிந்த பிறகு பல படங்கள் பிரபலமான ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. கடந்த மாதம், 3 பெரிய படங்கள் திரைக்கு வந்தன. அதில் ஓரிரண்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த, சில படங்கள் மொத்தமாக படுத்துக்கொண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பரில் வெளியான 3 பெரிய தமிழ் படங்கள்..


இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், பெரிய தமிழ் ஹீரோக்களின் படங்களோ, பெரிய பட்ஜெட் படங்களோ வெளியாகவில்லை. ஜூலை மாதத்திற்கு பிறகுதான் ஒவ்வொரு படங்களாக வெளியாக ஆரம்பித்தன. இதில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சில முக்கிய படங்கள் வெளியாகின. அவைதான் தங்கலான், டிமான்டி காலனி 2 மற்றும் ரகு தாத்தா. இந்த படங்கள் குறித்த விவரங்களையும், இவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம். 


டிமான்டி காலனி 2​:


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம், டிமான்டி காலனி 2. 2015ஆம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியானது. இந்த படத்திலும் அருள்நிதிதான் ஹீரோவாக நடித்திருந்தார். பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாக்‌ஷி கோவிந்தராஜன், அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படத்தை, ஜீ 5 தளத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் பார்க்கலாம். 


ரகு தாத்தா: 


புதுமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் வெளியான படம், ரகு தாத்தா. இந்தி திணிப்பிற்கு எதிராகவும், கலாச்சார திணிப்பிற்கு எதிராகவும் பல கருத்துகளை பேசிய இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம், கடந்த 13ஆம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?



தங்கலான்:


பா.ரஞ்சித் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம், தங்கலான். சியான் விக்ரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் பார்வதி திருவோது, பசுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இதற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான இந்த படம், சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியிருக்கிறது. இதனை, செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. 


வாழை: 


தமிழ் திரையுலகின் புரட்சி மிகு இயக்குநர் என்று கூறப்படும் மாரி செல்வராஜ், வாழை படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம், கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம், செப்டம்பர் 27ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ