Demonte Colony 2 OTT Release : சமீபத்தில் வெளியான தமிழ் படங்களுள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்றாக இருந்தது, டிமான்டி காலனி 2. எந்த படங்கள் வெளியானாலும் அவை உடனடியாக ஓடிடி தளங்களில் வெளியாவது வாடிக்கைாயகி வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்னர் தியேட்டர்களில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படமும் ஒரு பிரபல தளத்தில் வெளியாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிமான்டி காலனி 2:


பொதுவாகவே, தமிழ் திரையுலகில் பேய் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் படங்கள், காதல், பாடல், சண்டை, இறுதியில் சாமி பாட்டு, தெய்வம் வந்து பேயை வதம் செய்வது என்று டெம்பளேட்டாக மாறி, கமர்ஷியல்-பேய் படங்களாக மாறி வருகிறது. எப்போதாவது வரும் ஓரிரண்டு படங்கள் மட்டுமே உண்மையான பேய் படங்களின் திகிலை காண்பிக்கின்றன. அப்படி காண்பித்த படங்களுள் ஒன்றுதான், டிமான்டி காலனி. 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம், கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. 


டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்திலும் அருள்நிதிதான் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், முத்துகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை, அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.


ஓடிடி ரிலீஸ்:


இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகைகள் அதிகரித்து விட்டதால், தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் ஹிட் ஆனாலும் ஒரு சில நாட்களிலேயே ஆன்லைனில் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டது. அப்படி, வெளியாகி 18 நாட்கள் ஆகியிருக்கும் டிமான்டி காலனி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?


எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? 


டிமான்டி காலனி 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ 5 தளம் வாங்கியிருக்கிறது. எனவே, டிமான்டி காலனி 2 திரைப்படம் அந்த தளத்தில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படம், இம்மாதம் (செப்டம்பர்)  27ஆம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.


தங்கலான் படத்துடன் போட்டி:


டிமான்டி காலனி 2 திரைப்படம் வெளியான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, அப்படத்துடன் சேர்ந்து விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படமும் வெளியானது. டிமான்டி காலனி 2 படத்துடன் ஒப்பிடுகையில், தங்கலான் திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி, அஜய் ஞானமுத்து தனது சமீபத்திய படங்களில் தோல்வியை தழுவி இருந்தார். இதனால், அனைவரது கவனமும் தங்கலான் படம் மீதே இருந்தது. ஒரே நாளில் வெளியானாலும் இரு படங்களுமே ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் ஈட்டியது. 


தங்கலான் படம் 100 கோடிக்கு மேல் வசூலையும், டிமான்டி காலனி 2 திரைப்படம் உலகளவில் 55 கோடிக்கு மேலும் வசூலை ஈட்டியது. இந்த இரண்டு படங்கள் அன்றி, இன்னும் சில படங்கள் வெளியானாலும் இவை இன்னும் ஒரு சில தியேட்டர்களில் ஸ்கிரீனிங் செய்யப்பட்டு வருகின்றன. 


மேலும் படிக்க | தங்கலான் vs ரகு தாத்தா vs டிமாண்டி காலனி 2: வசூல் நிலவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ