தங்கலான் vs ரகு தாத்தா vs டிமாண்டி காலனி 2: வசூல் நிலவரம் இதோ

Box Office Collection of Thangalaan, Raghu Thatha, Demonte Colony 2: பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான், ரகு தாத்தா மற்றும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 17, 2024, 11:37 AM IST
  • முதல் நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 3.5 கோடிகள் வசூல்.
  • ரகு தாத்தா படம் ரூபாய் இதுவரை ரூபாய் 35 லட்சம் வசூல்.
  • ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தங்கலான் vs ரகு தாத்தா vs டிமாண்டி காலனி 2: வசூல் நிலவரம் இதோ  title=

Box Office Collection of Thangalaan, Raghu Thatha, Demonte Colony 2: பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான், ரகு தாத்தா மற்றும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம். 

தங்கலான் வசூல் நிலவரம்:
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து உருவான படம் தங்கலான். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 உலகளவில் திரையரங்கில் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, முன்னணி இசையமைப்பாளர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என பலர் நடித்திருந்தனர். இவர்கள் நடித்த கதாபாத்திரங்களுக்காக நிறைய உழைப்பு போட்டுள்ளனர். படம் வெளியானதை அடுத்த சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது 2 நாள் முடிவில் இந்த திரைப்படம் (Thangalaan) உலகம் முழுவதும் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | Nithya Menen National Film Award For Best Actress: நித்யா மேனனுக்கு பதிலா ‘இந்த’ நடிகைக்கு தேசிய விருது கொடுக்கலாம்! ரசிகர்கள் குமுறல்..

ரகு தாத்தா வசூல் நிலவரம்:
தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகியாக விளங்குபவர், கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம், ரகு தாத்தா (Raghu Thatha). இதை, புதுமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இதில், கீர்த்தியுடன் இணைந்து திவ்ய தர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தி திணிப்பு, கலாச்சார திணிப்பிற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணின் வாழ்வை காட்டியிருக்கிறது ரகு தாத்தா திரைப்படம். மேலும் படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் படக்குழு திருப்தி படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வசூல் நிலவரத்தை பொறுத்தவரை ரகு தாத்தா படம் ரூபாய் இதுவரை ரூபாய் 35 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.

டிமான்ட்டி காலனி 2 வசூல் நிலவரம்:
2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் (Demonte Colony 2) வெளியானது. தங்கலான், ரகு தாத்தா திரைப்படங்களுடன் இந்த திரைப்படமும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 3.5 கோடிகள் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது நாளில் படம் ரூபாய் 2.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் முதல் இரண்டு நாளில் ரூபாய் 6 கோடிகளை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Latest News Raayan OTT Release : ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News