Latest News Thalapathy 69 : விஜய்யின் கடைசி படமாக உருவாக இருக்கிறது, தளபதி 69 திரைப்படம். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில், யாரெல்லாம் நடிக்க இருக்கின்றனர் என்பது குறித்த விவரங்கள் கடந்த சில நாட்களாக அறிவிப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் கடைசி படம்:


கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் விஜய். நடனம், நடிப்பு, பாடல் பாடுவது, நகைச்சுவை செய்வது என மொத்த பேக்கேஜ்-ஆக வலம் வந்த இவர், திடீரென கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். தான் கமிட் ஆகியிருக்கும் படங்களில் நடித்து முடித்த பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்த விஜய், அதன் பின்பு சினிமாவை விட்டு மொத்தமாக விலகுவதாக தெரிவித்தார். 


விஜய், அரசியல் கட்சியை தொடங்கியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், அவர் திரையுலகை விட்டு விலக முடிவு செய்தது அதிர்ச்சியையும்-சோகத்தையும் அளித்தது. இதனால், கடந்த மாதம் வெளியான அவரது  ‘தி கோட்’ திரைப்படத்தை தியேட்டரில் கொண்டாடி களித்தனர். இந்த நிலையில், அவரது திரைப்பயணத்திற்கு இறுதி படமாக அமைந்திருக்கிறது, தளபதி 69. 


விஜய்யின் 69வது படம்:


நடிகர் விஜய், அவரது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்திற்கு ‘தளபதி 69’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1, வலிமை, துணிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த ஹெச்.வினோத், இந்த படத்தை இயக்க இருக்கிறார். 


“தளபதி 69 படம், அரசியல் சார்ந்ததா?” என்ற கேள்விக்கு ஒரு விருது விழாவில் பதிலளித்த அவர், “இது முழுக்க முழுக்க தளபதி விஜய்யின் படமாக இருக்கும்” எனக்கூறினார். ஏற்கனவே, கமல்ஹாசனின் 233வது படத்தை, ஹெச்.வினோத் இயக்க இருந்தார். இப்படம் பிறகு டிராப் ஆனதை தொடர்ந்து, அந்த கதையை கொஞ்சம் வேறாக வடிவமைத்து அதை விஜய்க்காக வினோத் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. 


எதிர்பார்க்காத படக்குழு:


தளபதி 69 படத்தை, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இவர்கள் முதன்முதலாக தயாரிக்கும் தமிழ்படம் இதுவாகும். இந்த நிறுவனம், கடந்த சில நாட்களாக தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பவர்கள் யார் யார் என்ற அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. அந்த விவரத்தை இங்கு பார்ப்போம். 


மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!


சர்ப்ரைஸ்:


தளபதி 69 படத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நடிகர் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன்தான். இவர், ஏற்கனவே விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



பாபி டியோல்:


அனிமல் படம் மூலம், இந்திய அளவில் பிரபலமான பாபி டியோல், தளபதி 69 படத்தில் இணைந்திருக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இவர், இதில் வில்லனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


பூஜா ஹெக்டே:


விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே, அவருடன் மீண்டும் தளபதி 69 படத்தில் இணைந்திருக்கிறார். இந்த ஜாேடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 


மமிதா பைஜு:


தற்போது பல தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்களின் க்ரஷ் லிஸ்டில் இருப்பவர், மமிதா பைஜு. 23 வயதாகும் இந்த நடிகை தனது இரண்டாவது தமிழ் படமான ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார். இவரை, அனைவருக்கும் தெரியப்படுத்தியது, பிரமலு படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ