உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?
யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2!
தமிழ் படங்களான GOAT மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களின் பாடல்கள், உலகளவில் யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங் 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் இருக்கின்றன. இது, சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியுற செய்திருக்கிறது.
இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன்வைரமுத்து.
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
மேலும் படிக்க | நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் செய்த சாதனை! என்ன தெரியுமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இடம் பிடித்திருக்கிறது.
இந்த இரண்டு பாடலையும் எழுதியவர் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து. இந்தியன் 2 திரைப்படத்தில் கபிலன் வைரமுத்து வசனமும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் படத்திற்காக கபிலன் வைரமுத்து எழுதியிருந்த விசில் போடு பாடல் ரசிகர்களிடம் இருந்து நெகடிவான விமர்சனங்களை பெற்றது. இதற்கு பதிலளித்த கபிலன், இந்த பாடலை ‘கூகுள் கூகுள்’ பாடல் போல எக்ஸ்பரிமெண்டிற்காக எழுதியதாகவும் சில சமயங்களில் இது போன்ற பாடல்கள் ஹிட ஆகாமல் போகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தியன் 2 பட பாடல்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் வரவேற்புதான் இருந்தது. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது கபிலன் எழுதிய பாடல்கள் இரண்டும் ட்ரெண்டிங்கிள் இருக்கும் தகவல் தீயாய் பரவி வருகிறது. கோட் படம், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியும், இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதியும் வெளியாகிறது.
மேலும் படிக்க | யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ