நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் செய்த சாதனை! என்ன தெரியுமா?

GOAT First Single Whistle Podu : கோட் படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் பாடியிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 15, 2024, 03:34 PM IST
  • கோட் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது
  • ரிலிஸாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் சாதனை படைத்துள்ளது
  • அது என்ன தெரியுமா?
நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் செய்த சாதனை! என்ன தெரியுமா? title=

GOAT First Single Whistle Podu : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம், GOAT (Greatest Of All Time). இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து இன்னும் பல பிரபலங்கள் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனத்தையும் உண்மையாகவே பாடர்கள் எப்படியிருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம். 

விசில் பாேடு பாடல் வெளியீடு:

GOAT படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். நேற்று சென்னை vs மும்பை போட்டி நடைப்பெற்றதை தாெடர்ந்து, GOAT படத்தின் பாடலான ‘விசில் பாேடு’ பாடல் வெளியானது. முதல் முறையாக, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நடிகர் விஜய், இப்பாடலை பாடியிருக்கிறார். 

24 மணி நேரத்திற்குள் இத்தனை மில்லியன் வியூஸ்களா..

விஜய் பாடியுள்ள முதல் சிங்கிள் விசில் பாேடு, நேற்று (ஏப்ரல் 14) மாலை 6 மணியளவில் வெளியானது. இப்பாடல் வெளியாகி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், இது தற்போது 20 மில்லியன் ரியல் டைம் வியூஸ்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பதிவை, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார். 

பாடல் குறித்து ரசிகர்கள் விமர்சனம்..

‘விசில் போடு’ லிரிக்கல் வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்ததை தொடர்ந்து, அவர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்கும் வகையில் பாடல் இருந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இப்பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். சிறந்த பாடலாசிரியர்களுள் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கும் அவர், இதுவரை விஜய்க்கென பல மாஸ் பாடல்களை எழுதியிருக்கிறார். ஆனால், இந்த விசில் பாேடு பாடலை அவர்தான் எழுதினார் என்பதை நம்ப முடியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

‘அனிருத்தான் கரெக்டு..’

நடிகர் விஜய் நடித்து கடந்த சில காலங்களாக வெளிவந்த படங்களுக்கு அனிருத்தான் இசையமைத்திருக்கிறார். இவர்களின் காம்பாேவில் உருவான கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ உள்ளிட்ட படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. படங்கள் வெளியாவதற்கு முன்னர் வெளியான முதல் சிங்கிளும் பெரிய அளவில் ஹிட் அடிக்கும். ஆனால், தற்போது யுவன்-விஜய்யின் காம்பாேவில் உருவாகியிருக்கும் விசில் பாேடு பாடலுக்கு, விஜய் ரசிகர்களே பலர் நெகடிவ் விமர்சனம் கொடுத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், எப்போதும் விஜய்யின் முதல் சிங்கிள் ஹிட் ஆக்குவதற்கு அனிருத்தான் சரியானவர் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது. 

அரசியல் வரிகள்?

விஜய் படங்களில் உள்ள பாடல்களிலும், அவர் படத்தின் டைலாக்குகளிலும் அரசியல் வாடை ஹெவியாக அடிப்பது வழக்கம். ‘விசில் போடு’ பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்பாடலில், “Champagne ஆ, Campaign ஆ, மைக்க எடுக்கவா..” போன்ற அரசியல் பேசும் வரிகள் பல இடம் பெற்றுள்ளன. இந்த வரிகளை டீ-கோட் செய்யும் வேலையில் நெட்டிசன்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

எப்போது ரிலீஸ்?

கோட் திரைப்படம், இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முடித்துக்கொண்டு, விஜய் தனது 69வது படத்தில் நடித்த கையோடு அரசியலில் களமிறங்க இருக்கிறார்.

மேலும் படிக்க | Aishwarya Shankar : இயக்குநர் ஷங்கர் மகளின் திருமண நிகழ்வில் திரையுலக பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News