Daniel Balaji Death Latest News : தமிழ் திரையுலகில் பிரபலமான மற்றும் திறமையான வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி, நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரை படங்களில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் அற்புதமான நடிகராக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரடைப்பால் உயிரிழந்த டேனியல் பாலாஜி:


நடிகர் டேனியல் பாலாஜி சென்னை, திருவான்மியூரில் வசித்து வந்தார். இவருக்கு வயது 48. நேற்று (மார்ச் 29) டேனியல் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்தி அருகில் இருந்தவர்கள் அவரை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 


பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி:


டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ள செய்தி, தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல், புரசைவாக்கத்தில் உள்ள வரதம்மல் காலனிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும், உறவினர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இறந்தும் வாழும் டேனியல் பாலாஜி..


இறந்தவர்கள் பலரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படுவது பெரிய காரியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், டேனியல் பாலாஜியின் கண்கள் தற்போது தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள், “அவர் இறந்தும் இவ்வுலகை பார்த்துக்கொண்டே இருப்பார்” என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


சீரியல்களிலும் நடித்திருக்கிறார்..


நடிகர் டேனியல் பாலாஜி, தமிழ் படங்களில் மட்டுமல்ல சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், நடிகர் முரளியின் உறவினர் முறை சகோதரர் ஆவார் (Cousin). இவர் முதன் முதலில் நடித்தது கமல் இயக்கிய, மருதநாயகம் படம்தான். இதையடுத்து, ‘சித்தி’ என்ற டெலிவிஷன் தொடரில் டேனியல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதில் இருந்துதான் அவருக்கு ‘டேனியல்’ என்ற பெயர் வந்தது. தொடர்ந்து அவருக்கு அலைகள் என்ற தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 


மேலும் படிக்க | கைவிடப்படும் சூர்யா - சுதா கொங்கரா படம்? சூர்யா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


வெறித்தனமான வில்லன் நடிகர்..


டேனியல் பாலாஜியின் முகத்தை அனைத்து தமிழக மக்களும் அறியும் படி செய்த படம், வேட்டையாடு விளையாடு. இதற்கு முன்னர் அவர்‘காக்க காக்க’ படத்தில் நடித்திருந்தாலும் தனித்துவமான வில்லனாக தெரிந்தது வேட்டையாடு விளையாடு படத்தில்தான். இந்த படத்தில் அவர் அமுதன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவருக்கு தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்கள் தமிழ் திரையுலகில் இருந்து தள்ளியே இருந்த இவர், மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக, கடந்த ஆண்டு அரியவன் எனும் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 


சில இயக்குநர்களுடன் மட்டுமே பணிபுரிந்தார்..


வழக்கமாக சில ஹீரோக்கள்தான், தனக்கு செட் ஆகும் இயக்குநர்களுகளுடன் தாெடர்ந்து பணிபுரிவர். ஆனால் வில்லன் நடிகரான டேனியல் பாலாஜியும் அப்படித்தான். அவர், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இதே போல வெற்றி மாறனின் பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிற இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அவை, மேற்கூறிய படங்கள் அளவிற்கு பெரிதாக பேசப்படாத படங்களாக உள்ளன. 


மேலும் படிக்க | பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ