லெஜண்ட் சரவணா ஷாப்பிங்கின் உரிமையாளரான சரவணன் அருள் 2022 ஆம் ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சரவணன் இப்போது தனது இரண்டாவது படத்தை எடுக்கும் முயற்சியில் பணியாற்றத் தொடங்கியுள்ளார். அவர் சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான தாடி வைத்த புதிய படத்தை இணையத்தில் வெளியிட்டார்.  தற்போது, ​​இரண்டு பிரபல 'குக்கு வித் கோமாளி' பிரபலங்கள் உடன் சரவணன் அருள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் 8 புதிய படங்கள்! முழு விவரம்!


புதிதாக வரவுள்ள ஒரு விளம்பர படத்தில் நடித்த போது இந்த படத்தை எடுத்து உள்ளனர்.  விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான CWC மூலம் புகழ் பெற்ற நடிகைகள் மணிமேகலை மற்றும் ஸ்ருதிகா, சமூக ஊடகங்களில் சர்வணனுடன் எடுத்து கொண்ட படத்தைப் பகிர்ந்து அவரை பாராட்டினர்.  இன்ஸ்டாகிராமில், மணிமேகலை இந்த படத்தைப் பதிவிட்டு, " நேற்று நடைபெற்ற, the legend saravana stores புதிய விளம்பரப் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் இது.  நம்பிக்கையின் நாயகன் லெஜண்ட் சரவணன் சார், அவர் மிகவும் பணிவானவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பர் ஷ்ருதிகாவை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டு இருந்தார்.  



கடந்த ஆண்டு வெளியான லெஜண்ட் படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்ட பலரும் இப்படத்தை ஓடிடியில் பார்க்க ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் லெஜெண்ட் படம் இலவசமாக பார்க்கும் விதத்தில் வெளியானது.  மேலும், குறிப்பிட்ட மணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்ததிலும் இப்படம் சாதனை படைத்தது.  லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


மேலும் படிக்க | மிகப்பெரிய பட்ஜெட்டில்... மீண்டும் வெற்றி இயக்குநருடன் தனுஷ் - வந்தது மெகா அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ