முதல்முறையா இப்படியொரு ஆஃபர்..! வைஃபை கனெக்சன் வாங்கினால் ஸ்மார்ட் டிவி இலவசம்

Excitel Smart Wi-Fi Plan: மாதம் வெறும் ரூ.999 மட்டுமே செலுத்தினால் போதும். இந்த வைஃபை திட்டத்தை வாங்கினால் உங்களுக்கு நிறுவனம் ஸ்மார்ட் டிவியும் இலவசமாக வழங்கும். ஸ்மார்ட் வைஃபை திட்டங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி பிளான் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2023, 06:23 PM IST
  • இந்தியாவில் வைஃபை திட்டங்களுடன் ஸ்மார்ட் டிவி வழங்குவது இதுவே முதல்முறை.
  • 32-இன்ச் ஸ்மார்ட் டிவி, 6 ஓடிடி, 300-க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் கிடைக்கும்.
  • ஐபிஎல் பார்க்க விரும்பும் வாடிக்கையளர்களுக்கு இந்த திட்டம் நல்ல சாய்ஸ்.
முதல்முறையா இப்படியொரு ஆஃபர்..! வைஃபை கனெக்சன் வாங்கினால் ஸ்மார்ட் டிவி இலவசம் title=

Excitel Launches New Plan: நீங்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கு பிராட்பேண்ட் இணைப்பு சேவை இலவசமாக கிடைக்கும். இது கனவு அல்ல நிஜம் தான். இணைய சேவை வழங்கும் நிறுவனமான எக்ஸிடெல் (Excitel) ஒரு தனித்துவமான திட்டத்தை அறிமுகப்படுத்தியு உள்ளது. எக்ஸிடெல் நிறுவனம் ஸ்மார்ட் வைஃபை திட்டத்துடன் முதல் முறையாக நாட்டில் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிராட்பேண்ட் மற்றும் இணைப்பு வசதியை வழங்கும் நிறுவனம் இந்தியாவில் வைஃபை (Wi-Fi) திட்டங்களுடன் ஸ்மார்ட் டிவியை வழங்குவது இதுவே முதல் முறை. இந்தத் திட்டத்தின் மூலம் 300Mbps வரையிலான அதிவேக இணைய சேவை, 32-இன்ச் ஃப்ரேம்லெஸ் ஸ்மார்ட் எல்இடி டிவி, 6 ஓடிடி (OTT) தளம் மற்றும் 300க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களை வழங்குகிறது. இந்த புதிய திட்டம் தற்போது டெல்லி பிராந்தியத்தில் உள்ள எக்ஸிடெல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இதற்காக உங்களுக்கு மாதத்திற்கு ரூ.999 செலவாகும். ஸ்மார்ட் வைஃபை திட்டத்துடன் புதிய எக்ஸிடெல் ஸ்மார்ட் டிவி மூலம் கிடைக்கும் சலுகைகள் என்ன என்பதை விரிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட் வைஃபை திட்டங்களுடன் கூடிய எக்ஸிடெல் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட் டிவியானது, பல்வேறு பொழுதுபோக்கு விருப்பங்களுடன் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ஸ்மார்ட் டிவி மற்றும் ஓடிடி செயலிகள் உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் பெற வாடிக்கையாளர்கள் வருடாந்திர சந்தாவிற்கு பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் விலை ஆண்டு சந்தா ரூ.11,988 மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ.999. நல்ல விஷயம் என்னவென்றால், வைபை ரவுட்டர் மற்றும் நிறுவலுக்கு கூடுதல் கட்டணம் இருக்காது. நினைவில் கொள்ளுங்கள், மேலே குறிப்பிட்டுள்ள விலையில் ஜிஎஸ்டி தனித்தனியாக சேர்க்கப்படும்.

மேலும் படிக்க: Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இப்படி செய்தால் சிறை தண்டனை

இந்த திட்டத்தில் பயனர்களுக்கு எச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட 32-இன்ச் ஃப்ரேம்லெஸ் ஸ்மார்ட் டிவி கிடைக்கும். இந்த டிவியில் 20W ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் 9.0, எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஏவி போர்ட், 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள் சேமிப்பு வசதி உள்ளது. எக்ஸிடெல் ஸ்மார்ட் டிவிக்கு 1 வருட ஆன்-சைட் வாரண்டியையும் வழங்குகிறது.

ஸ்மார்ட் வைஃபை திட்டத்துடன் கூடிய ஸ்மார்ட் டிவியில் Alt Balaji, ஹங்காமா ப்ளே, ஹங்காமா மியூசிக், Shemaroo, எபிக் ஆன் (Epic On) மற்றும் பிளேபாக்ஸ் டிவி ஆகிய 6 ஓடிடி ஆப்ஸ்கள் உள்ளன. இவை தவிர, புதிய வாடிக்கையாளர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 300 க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களுக்கான அணுகலைப் பெறுவார்கள். டெல்லி பிராந்தியத்தில் உள்ள புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா ஐபிஎல் 2023 நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்மார்ட் வைஃபை (Smart Wi-Fi) திட்டத்துடன் கூடிய எக்ஸிடெல் ஸ்மார்ட் டிவி (Excitel Smart TV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலவச ஸ்மார்ட் டிவி மற்றும் லைவ் சேனல்கள் மூலம், ஐபிஎல் பார்க்க விரும்பும் புதிய வாடிக்கையளர்களுக்கு இந்த திட்டத்தை எக்ஸிடெல் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

மேலும் படிக்க: Alert உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக்கர்களிடமிருந்து பாதுகப்பது எப்படி? எளிய டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News