மிகப்பெரிய பட்ஜெட்டில்... மீண்டும் வெற்றி இயக்குநருடன் தனுஷ் - வந்தது மெகா அப்டேட்!

தனுஷின் திரைப்பட வரலாற்றிலேயே, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் உடன் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 9, 2023, 09:41 PM IST
  • இது தனுஷின் தயாரிப்பில் வரும் 15ஆவது திரைப்படம்.
  • படத்தின் அப்டேட்டை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குதூகலம்.
மிகப்பெரிய பட்ஜெட்டில்... மீண்டும் வெற்றி இயக்குநருடன் தனுஷ் - வந்தது மெகா அப்டேட்! title=

நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, 'கர்ணன்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் தனுஷின் வொண்டர்பார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

இதுகுறித்து ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் தனுஷின் வொண்டர்பார் நிறுவனங்கள் இணைந்து, தங்களது இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (ஏப். 9) வெளியிட்டுள்ளன. விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்து, வெற்றி பெற்ற 'கர்ணன்' திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் வொண்டர்பார் நிறுவனங்கள் இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

மேலும் படிக்க |  அதிக வசூல் செய்த டாப் 5 மலையாள படங்கள்..இந்த படம் இல்லையா..

நடிகர் தனுஷின் திரைப்படங்களிலேயே, மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷுன் Wunderbar Films சற்று இடைவெளிக்கு பின்னர், மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில், இறங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷிற்கு சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்ததால், தற்போது பெரிய பட்ஜெட்டில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை நிறைவு செய்துள்ளார். இப்படம் மே மாதம் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் 'வாழை' என்ற மற்றொரு படத்தையும் இயக்கி, அதன் பணிகளில் மும்முரமாக உள்ளார். இந்த திரைப்படங்கள் நிறைவடைந்த பின்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க |  ஒரே நேரத்தில் இத்தனை படங்களா? அடுத்தடுத்து வெளியாகியுள்ள ரஜினி பட அப்டேட்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News