விஜய்-லோகேஷ் கனகராஜ்ஜின் இரண்டாவது கூட்டணியாக உருவாகியுள்ளது ‘லியோ’ திரைப்படம். இவர்கள் மாஸ்டர் படத்தில் முதன்முதலாக ஒன்றிணைந்து பணிபுரிந்தனர். லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படத்தின் அதிகாலை காட்சிகள் தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் முதல் காட்சி காலை 4 மணி மற்றும் 5 மணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லியோ படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு:


லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் இப்படத்திற்கு பலத்த வரவேற்பினை அளித்துள்ளனர். படத்தின் முதல் பாதியில் பல ட்விஸ்டுகள் நிறைந்துள்ளதாகவும் அடுத்த பாதியில் கூஸ்பம்ஸ் கொடுக்கும் பல காட்சிகள் நிறைந்துள்ளதாகவும் ரசிகர்கள் டிவிட்டர் எக்ஸ் தளத்தில் கூறி வருகின்றனர்.


லியோ படம் குறித்த செய்திகைளை ரசிகர்கள் பலர் இணையத்தில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அப்படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதையும் அவரையடுத்து பெரிய தொகையை யார் சம்பளமாக வாங்கியுள்ளார்கள் என்பதையும் இங்கே பார்ப்போம். 


விஜய்யின் சம்பளம்:


தென்னிந்திய திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், விஜய். இவர் தமிழ் திரையுலகின் பணக்கார நடிகராகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய். ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக இவருக்கு இந்த தொகை சம்பளமாக கிடைத்தது. தற்போது மளமளவென உயர்ந்து உச்ச நடிகராக இருக்கும் இவர், சில படங்களுக்கு முன்பிருந்து ட்ரிப்புள் டிஜிட்டில்தான் சம்பளம் வாங்கி வருகிறார். லியோ படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர் நடிக்கும் ‘தளபது 68’ விஜய் 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 



அடுத்து அதிக சம்பளம் வாங்கியுள்ளவர் யார்? 


லியோ படத்தில் விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கியுள்ளவர், சஞ்சய் தத்தான் என கூறப்படுகிறது. பான் இந்திய நடிகரான இவர் பாலிவுட்டில் பல படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரும் விஜய் போலவே திரையுலகில் மிகவும் அனுபவசாலி. கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த பிறகு, தற்போது இவர் பான் இந்திய அளவில் பெரிய நடிகராக வலம் வருகிறார். இவர், லியோ படத்திலும் ஆண்டனி தாஸ் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர் 8 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். 


மேலும் படிக்க | இணையத்தில் லீக் ஆன ‘லியோ’ படம்..! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!


த்ரிஷா:


தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்படுபவர், த்ரிஷா. இந்த பெயருக்கு ஏற்றார் போல உண்மையாகவே சினிமா உலகின் ராணியாகவே திகழ்கிறார். இவர் விஜய்யுடன் 15 வருடங்கள் கழித்து ஒன்றிணைந்து நடித்திருக்கும் படம், லியோ. சமீபத்தில் ‘அன்பெனும்’ பாடல் வெளியானது. இதில் த்ரிஷாவையும் விஜய்யையும் பார்த்த இவர்கள் கில்லி படத்தின் எடிட்ஸ்களையும் இப்படத்தின் எடிஸ்களையும் இணைத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். லியோ ஒரு படத்திற்கு 12 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், லியோ படத்திற்காக அவர் 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 


அர்ஜூன்:


நடிகர் விஜய்யுடன் லியோ படம் மூலம் முதன் முதலாக கைக்கோர்த்துள்ளார், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். இப்படத்தில் இவர் ஹரால்டு தாஸ் என்ற பயங்கர கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். க்ளிம்ஸ் வீடியோவிலேயே அவர் யாரையோ வெட்டுவது போன்ற காட்சியும் “தெரிக்க..” என டைலாக் பேசும் காட்சியும் ரசிகர்களிடையே பிரபலமானது. இதில் நடிப்பதறகாக இவர் 1 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம். 


வேற்று யாருக்கு என்ன சம்பளம்?


லியோ படத்தில் பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சான்டி மாஸ்டர் உள்ளிட்டோருக்கு 50-70 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா லியோ? டிவிட்டர் விமர்சனம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ