ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா லியோ? டிவிட்டர் விமர்சனம் இதோ!

Leo Twitter Review: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படியிருக்கிறது? இங்கே தெரிந்து கொள்வோம்.

Written by - Yuvashree | Last Updated : Oct 19, 2023, 09:38 AM IST
  • ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
  • லியோ, எல்.சி.யுவில் இருக்கிறதா இல்லையா?
  • இப்படம் எப்படியுள்ளது? இதோ டிவிட்டர் விமர்சனம்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா லியோ? டிவிட்டர் விமர்சனம் இதோ! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. ரசிகர்கள், நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்காெண்டிருந்த படம் இது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உள்ள லியோ, ரசிகர்களை கவர்ந்துள்ளதா? இதோ தெரிந்து கொள்வோம். 

குறிப்பு: Spoilers-ஐ தெரிந்து கொள்ள விரும்பாதோர், இந்த விமர்சனத்தை தவிர்க்கவும். 

“வேற மாறி..வேற மாறி”

லியோ படம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய நேரப்படி 5 மணிகே வெளியாகி விட்டது. அங்கு லியோ படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படத்தின் முதல் பாதி விமர்சனத்தை “வேற மாறி வேற மாறி..” என்று பதிவிட்டுள்ளார். 

மிகவும் வேகமான திரைக்கதை எனவும் ஃபுல் ஃபயர் மோடில் படம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஹைனா உடன் சண்டை..

லியோ படத்தின் போஸ்டர்களில், ஒரு ஹைனாவுடன் விஜய் சண்டை போடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காட்சி படத்தில் நன்றாக வந்துள்ளதாக ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். 

விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக சம்பவம் காத்துக்கொண்டுள்ளதாகவும், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் எண்ட்ரிக்கு பைசா வசூல் என்றும் அந்த ரசிகர் தனது டிவிட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | டைட்டானிக் ஹீரோவை அதிர வைத்த விஜய்? லியோ பார்த்து பின்வாங்கிய லியார்னடோ

குடும்பங்கள் தவிர்க்கவும்..!

படத்தின் நேர்காணல்களின் போதே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் “குடும்ப கதையை எதிர்பார்த்து வராதீர்கள்..” என்று கூறிவிட்டார். அதே போல இன்று படம் பார்ப்பவர்களும் குடும்ப கதை பிடித்தவர்கள் இப்படத்தை பார்க்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர். 

லியோ படத்துடன் பகவத் கேசரி எனும் படமும் வெளியாகி உள்ளது. இதையும் விஜய் படத்தின் விமர்சனங்களையும் பார்த்த தெலுங்கு ரசிகர் ஒருவர் “பகவத் கேசரி படத்தை அனைவரும் பார்க்கலாம் என்றும், லியோ படத்தை குடும்பங்கள் தவிர்க்கலாம்” என்றும் கூறியுள்ளார். 

பல ட்விஸ்ட் இருக்கு..

லியோ படத்தில் பல ட்விஸ்டுகள் காத்துக்கொண்டுள்ளதாக மயிர்கூச்சரிய வைக்கும் பல சம்பவங்கள் படத்தில் உள்ளதாகவும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் எழுதியுள்ள டிவிட்டர் விமர்சனத்தில், செகண்ட் ஆஃப் சம்பவத்திற்காக காத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட லியோ போஸ்டர்களால் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News