லியோ படத்திற்கு 4 மணி காட்சி? முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
Leo Update: விஜய் நடித்துள்ள லியோ படம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் ரிலீசுக்கு முன்பே வசூல் மழை கொட்டி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. விஜய் படம் என்றாலே பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது என்ற வழக்கத்தை போல், லியோ படத்திற்கும் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் லியோ பட போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பதாக பிரச்சனைகள் இருந்தது, பின்பு லியோ ஆடியோ லான்ச் கடைசி நிமிடத்தில் நடைபெறாமல் தடைப்பட்டது. மேலும் லியோ படத்தின் டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்பு அந்த வார்த்தை நீக்கப்பட்டது.
மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் கடைசியாக விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்திற்கு அதிகாலை காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டது, அதன் பின்பு தற்போது வரை தமிழகத்தில் எந்த ஒரு படத்திற்கும் அதிகாலை 4 மணி காட்சி மற்றும் ஒரு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் லியோ பட குழு தமிழக அரசிடம் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது/ முதலில் நேரம் குறிப்பிடாமல் நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் அனுமதி என்று அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. இதனால் 4 மணி காட்சிகள் போட்டுக் கொள்ளலாம் என்று திரையரங்குகளில் தயாராக இருந்தன. கடைசி நேரத்தில் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே தொடங்க வேண்டும் என்றும் கடைசி காட்சி அதிகாலை 1.30 ஆக இருக்க வேண்டும் என்றும் நேரத்தை குறிப்பிட்டு தமிழக அரசு மீண்டும் ஒரு அரசாணை வெளியிட்டது.
மேலும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் ஒளிபரப்பக் கூடாது என்றும், அதனை மேலும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், லியோ தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தது. லியோ படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி தர வேண்டி கேட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், காலை 9 மணிக்கு பதில் 7 மணிக்கு அனுமதிக்கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் முறையிடலாம் என்றும் இன்று மாலைக்குள் இதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும் பட குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழு மிகுந்த வருத்தத்தில் உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் முக்கிய திரையரங்குகளில் இன்னும் டிக்கெட் விற்பனை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் பவா செல்லதுரை போட்ட முதல் போஸ்ட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ