வசூலில் தெறிக்கவிடும் லவ் டுடே, 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே படம் திரையரங்கில் சக்கைபோடு போட்டு ரூ50 கோடியை தட்டி தூக்கி உள்ளது.
கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த படத்தில் ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.
மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்
இதனிடையே முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தற்போதைய நிலவரப் படி இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் 3 கோடியாகவும், இரண்டாம் நாள் 5.35 கோடியாகவும், மூன்றாம் நாள் 6.25 கோடியாகவும், ஐந்தாவது நாட்களில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இதற்கிடையில் இந்த படத்தின் பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோல ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ரீமேக் உரிமைகள் மூலமாக கூடுதலாக லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ