பாலிவுட்டின் பிரபல படங்களுள் ஒன்றான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா, விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லஸ்ட் ஸ்டோரீஸ் 2:


4 வித்தியாசமான கதைகளை படமாக ஆந்தாலஜி படம்தான், லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகம் 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பெயரில் பல பாலிவுட் நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ளது. பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்வதுதான் படத்தின் கதை. 


டீசர் ரிலீஸ்!


இந்திய நெட்ஃப்ளிக்ஸின் யூடியூப் தளத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் அளவிற்கு வெளியாகியுள்ள இந்த டீசர் மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா உள்ளிட்ட நாயகிகள் ஆகியோரின் கதைகள் இடம் பெற்றுள்ளன.



கவர்ச்சியின் உச்சத்தில் தமன்னா..


சமீப காலமாக தமன்னா நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாமல் இருந்தார். ஆனால், தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவ்வப்போது இடுப்பை காட்டி வந்த தமன்னா, சினிமாவில் நல்ல நிலைக்கு வந்த பின்னர் மொத்தமாக கவர்ச்சி காட்டுவதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தமன்னா ‘தரிசனம்’ கொடுக்கவுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘அந்த மூன்று நாட்கள்..’ இன்ஸ்டாவில் தனது பயணம் குறித்து மனம் திறந்த சமந்தா!


“திருமணத்திற்கு முன்னாடி ட்ரையல்..”


லஸ்ட் ஸ்டோரிஸ், பாலிவுட் உலகின் பிரபல நடிகையான நீனா குப்தா வயதான பெண்மனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்த ட்ரைலரில் அவர் “காரை வாங்குவதற்கு முன்னர் டெஸ்ட் ட்ரைவ் செய்ய வேண்டும்..” என்று சில பெண்களிடம் கூறுகிறார். இதற்கு “திருமணத்திற்கும் முன்பு ட்ரையல் பார்க்க வேண்டும்..” என்று அர்த்தம். இதைக்கேட்டுக்கொண்டிருந்த விஜய் வர்மாவும் மிருணாள் தாகூரும் சிரித்துக்கொண்டே திரும்பவது போல இந்த ட்ரைலரில் வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கஜோல், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் கூடுதல் அழகாகவே தெரிகிறார். 


பாலியல் உறவு குறித்த கதையா? 


லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற பெயரிலேயே, கதை எப்படிப்பட்டது என்பதை விளக்கியிருக்கிறார், படத்தின் இயக்குநர். இந்தியாவை பொருத்த வரையில் பொதுவாகவே பெண்களின் பாலியல் ஆசைகளும் அவர்களுக்கு உடலுறவில் எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை தெரிவிக்க கூட முடியாத அளவிற்கான கட்டுப்பாடுகள் இந்த சமூகத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இதை உடைத்தெரியும் நோக்கில்தான் லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற படங்களும் தொடர்களும் உருவாகி வருகின்றன. ஒரு சில கலாச்சார பேர்வழிகள் “இது நாட்டிற்கு தீங்கு..” என்பது போன்ற வசனங்களை பேசினாலும் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அம்சங்களைத்தான் இது போன்ற படைப்புகள் எடுத்துரைக்கின்றன என்பதே உண்மை. 


நிஜ காதலர்கள்..திரையிலும் காதலர்கள்..


லஸ்ட் ஸ்டோரிஸ் ட்ரைலரில், நடிகர் விஜய் வர்மா மற்றும் தமன்னா ஆகியோரை காதலர்கள் போன்று காட்சிப்படுத்தியுள்ளனர். உண்மையிலேயே இவர்கள் இருவரும் காதலர்கள்தான் என்று சில ரசிகர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர். சொல்லப்போனால், இருவரும் லஸ்ட் ஸ்டோரி படப்பிடிப்பின் போதுதான் காதலிக்க தொடங்கினர் என்று கூறப்படுகிறது. இவர்களது பேரிங்கை பார்க்கவே பல ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 


படக்குழு:


லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் மொத்தம் நான்கு கதைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாலிவுட் இயக்குநர்கள் இயக்கியுள்ளன. ஜோயா அக்தர், கரண் ஜோஹர், அனுராக் கஷ்யப் மற்றும் திபாகர் பேனர்ஜீ ஆகிய நான்கு பேர்தான் இந்த படத்தின் இயக்குநர்கள். மேலும், பிரபல நடிகைகளான கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இதற்கு முன்னர் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 1 படத்தில் கியாரா அத்வானி, விக்கி கெளஷல், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  லஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படம் வரும் 18ஆம் தேதி வெளியாகிறது. 


மேலும் படிக்க | ‘ஆதிபுருஷ் வெளியாகும் தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு சீட்’ கேலிக்குள்ளான படக்குழுவின் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ