சீனுராமசாமி விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.யுவனும், இளையராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019ஆம் ஆண்டே இப்படம் முழுமையாக முடிந்துவிட்டாலும் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றார்.


 



இதனையடுத்து ரிலீஸ் பணிகள் வேகம் பிடித்தன. இதன் ஆடியோ ரிலீஸும் புதுச்சேரியில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. மேலும் படமானது மே 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க | பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்: மகளின் பெயர் இதுதான், பெயருக்கான காரணம் என்ன தெரியுமா


இந்நிலையில், மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. அதன்படி இப்படமானது ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் சீனு ராமசாமியும், ஆர்.கே. சுரேஷும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர்.


மேலும் படிக்க | கவர்ச்சியாக இல்லை அழகாக உணர்கிறேன் - காஜல் அகர்வால் நெகிழ்ச்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR