மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் மாமன்னன். இப்படம், தற்போது 3ஆவது நாளாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாமன்னன் ரிலீஸ்:


‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம், மாமன்னன். சாதிய ரீதியான அடக்குமுறைகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருன் கூக்குரல் என பல விஷயங்களை தனது படங்கள் மூலம் காண்பிக்கும் மாரி செல்வராஜ், மாமன்னன் படத்திலும் அதையே காண்பித்திருந்தார். இதில், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவின் மகனாகவும் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாகவும் கம்யூனிஸ்டு கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். ‘இசைபுயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம், கடந்த மாதம் 29ஆம் தேதியன்று திரைக்கு வந்தது. 


மேலும் படிக்க | மெகா ஸ்டாருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் திரிஷா


 


சம்பள விவரம்…


மாமன்னன் திரைப்படம் சுமார் 40-50 கோடியளவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில், நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இவர் ஒரு படத்திற்கு 4 கோடி வரை சம்பளம் கேட்கிறார். மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ஒரு படத்திற்கு 3.5-6 கோடி ரூபாய் வரம் சம்பளம் வாங்குகிறார். மாமன்னன் படத்திற்காக இவர், 2-3கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலு, 3-4 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 


இவருக்குத்தான் அதிக சம்பளமா..?


தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் ‘ராசா கண்ணு’ என்ற கதாப்பாத்திரத்தில் வடிவேலுவிற்கு மகனாக நடித்திருந்தார். இவர், இப்படத்தில் நடிக்க 4-5 கோடி வரை இவர் சம்பளமாக வாங்கியிருக்கலாம் என பேசப்படுகிறது. இந்த படத்தில் நடித்தவர்களிலேயே உதயநிதி வாங்கிய சம்பளம்தான் அதிகம் என கூறப்படுகிறது. 


வடிவேலுவிற்கு நல்ல வாய்ப்பு..


நடிகர் வடிவேலு, 15 வருடங்களுக்கு முன்னர் நம்பர் 1 நகைச்சுவை கலைஞராக கொடிக்கட்டி பறந்தார். பின்னர் துனை நடிகர்களுடன் பிரச்சனை, இயக்குநர் ஷங்கருடன் பிரச்சனை என தொடர் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் இவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து ரெட்கார்டு காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவையெல்லாம் அவருக்கு கைகொடுக்காமல் போனது. தற்போது மாமன்னன் படம் மூலம் தனது நடிப்பில் புதிய பரிமானத்தை தொட்டுள்ளார் வடிவேலு. இவரது நடிப்பில் அடுத்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 


‘தேவர்மகன்’ சர்ச்சை..


மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இவ்விழாவில் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். இந்நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சைக்கருத்தினை கூறினார். இது, அவர் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. பலர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலினிற்கு எதிராக கண்டன குரல் எழுப்பினனர். இது பெரும் சர்ச்சையாக வெடித்தநிலையில் ‘மாமன்னன்’ படத்தை வெளியிடக்கூடாது எனக்கூறி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்டு ஃப்ளாக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பல இன்னல்களுக்கு பிறகு படம் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது. ஆனால், மாரி செல்வராஜின் பிற படங்களை போல இல்லாமல் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மீண்டும் தள்ளிப்போகும் எச் வினோத் - கமல்ஹாசன் படம்! இதுதான் காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ