உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருந்த ‘மாமன்னன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அப்படம் ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘மாமன்னன்’ திரைப்படம்:


‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ்ஜின் இயக்கத்தில் வெளிவந்த படம், மாமன்னன். இந்த படத்தில் தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில், பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லனாக வந்தார். நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். இந்த படம், விரைவில் ஒரு பிரபலமான ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 


ஓடிடி ரிலீஸ்:


மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியானது. படத்திற்கு மக்கள் பலர் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தனர். ஆனாலும் தற்போது வரை இப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வரும் 27ஆம் தேதியில் இருந்து ஸ்ட்ரீம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்ஃப்ளிஸ் இந்தியா சவுத் நிறுவனம் ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளது. 



உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர் ரஹ்மான், மாரி செல்வராஜ், வடிவேலு என அனைவரையும் குறிப்பிட்டு இந்த படம் வெளியாகும் தேதியையும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 


மேலும் படிக்க | 'போர் தொழில்' திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?


4 மொழிகளில் வெளியீடு:


மாமன்னன் திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமன்றி, இன்னும் சில மொழிகளிலும் நெட்ஃபிலிக்ஸில் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம், தெலுங்கில் சில நாட்களுக்கு முன்னர்தான் ‘நாயகடு’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. தற்போது இம்மாத இறுதியில் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 


கதை என்ன..? 


ஜாதி வெறி பிடித்த அரசியல்வாதியை எதிர்த்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடும் தந்தை-மகன் குறித்த கதைதான் மாமன்னன். இதில், வில்லனான ரத்னவேலு கதாப்பாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த எம்.எல்.ஏ மாமன்னன் கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். லீலா என்ற கம்யூனிஸ்டு கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆதி வீரன் என்ற ஹீரோ கதாப்பாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ரத்ன வேலுவின் மனைவி கதாப்பாத்திரத்தில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா ரவி நடித்துள்ளார். 


இசை எப்படி..?


ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பெரும்பாலும் ஜாலியான கதையம்சம் நிரம்பிய படங்களுக்கு இசையமைத்திருந்த இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு அழுத்தமான கதை நிறைந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்திருந்த ‘ராசாக்கண்ணு’ பாடலும் ‘ஜிகு ஜிகு ரயிலு’ பாடலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தன. பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 


வாரிசு நாயகருடன் இணையும் மாரி செல்வராஜ்..


நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் ரீ-மேக் படமான ‘ஆதித்யா வர்மா’ படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். பின்னர், தன் தந்தையுடன் ‘மஹான்’ படத்தில் நடித்திருந்தார். இது அவருக்கென்ற ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவருடன் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கும் இந்த படத்தில், துருவ் விக்ரம் ஒரு பிரபல கபடி வீரரின் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மாரி செல்வராஜ் தனுஷுடன் கைக்கோர்ப்பதாக அறிவித்திருந்தார். அந்த படத்தின் பணிகள், விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ஜிம் சூட்டிலும் போட்டோ ஷூட்..! தர்ஷா குப்தாவின் எல்லை மீறும் கவர்ச்சி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ