மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஏரளமான மக்கள் காத்துக்கொண்டிருக்கும் ஒரு வரலாற்று திரைப்படம்.  கல்கியின் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது, தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை கூறும் விதமாக இப்படம் அழகாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.  இந்த படத்தை பலரும் எடுக்க முயன்று கைவிட்டனர், இயக்குனர் மணிரத்னமும் இதனை நீண்ட நாட்களாக உருவாக்க நினைத்த நிலையில் தற்போது தான் இந்த கனவு பலித்துள்ளது.  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலிற்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அந்த புத்தகத்தை படிக்கையில் ஒவ்வொருவரும் அதை கண்ணால் காண ஆசைப்பட்ட நிலையில் தற்போது இப்படம் திரையில் பிரம்மாண்டமாக வெளியாகப்போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தனுஷ் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!


இந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வரியா ராய், பிரபு, சரத்குமார், சோபிதா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விஜயகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றது.  கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது நிறைவடைந்து இந்த ஆண்டு செப்டெம்பர்-30ம் தேதி வெளியாகவுள்ளது.  தற்போது இப்படம் பற்றி வெளியாகியுள்ள ஒரு தகவலின்படி, படத்தில் ஒரு பாடலில் 300 நடன கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர், மும்பையில் இருந்து மட்டும் 100 நாடன கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  இந்த பாடலை எடுக்க கிட்டத்தட்ட 25 நாட்கள் ஆகியுள்ளது.  பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை விரைவில் படக்குழு வெளியிடும் என்று கூறப்படுகிறது.



மணிரத்தினம் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது.  லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.


மேலும் படிக்க | நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ