Marakkuma Nenjam Movie Review:  விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன், துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  தற்போது அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் மறக்குமா நெஞ்சம்.  ராகோ.யோகேந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்ஷய் பூல்லா கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.  ரக்ஷன், தீனா, ஸ்வேதா வேணுகோபால், மலினா, மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  சச்சின் வாரியர் இசையமைக்க கோபி துரைசாமி மற்றும் ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!



ரக்ஷன், தீனா, ஸ்வேதா வேணுகோபால் போன்றோர் பள்ளியில் இருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்குகிறது. 2008 ஆம் ஆண்டு இவர்கள் பள்ளி, பரீட்சையில் 100% தேர்ச்சியை கொடுக்க மோசடி செய்துள்ளது என்றும் இதனால் அந்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர், அங்கு என்ன நடக்கிறது என்பதே மறக்குமா நெஞ்சம் படத்தில் கதை.


கதையாக கேட்கவும், பார்க்கவும் வித்தியாசமாக புதுவித அனுபவத்தை தந்தது மறக்குமா நெஞ்சம். முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பள்ளி கால நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் விதமாக நிறைய காட்சிகள் கதையில் இடம் பெற்றுள்ளது.  ரக்ஷன் மற்றும் தீனா இடையே நடக்கும் காமெடி காட்சிகள் நிறைய இடங்களில் ரசிக்க வைத்தது, மேலும் பல இடங்களில் தீனா கைத்தட்டல்களை பெறுகிறார்.


இவர்களுடன் முனிஷ்காந்த் வழக்கமான காமெடி கதாபாத்திரமாக நடிக்காமல், ஒரு கேரக்டர் ரோலில் நடித்துள்ளார்.  பெண் கதாபாத்திரங்களான ஸ்வேதா வேணுகோபால், மதீனா ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நன்றாக நடித்துள்ளனர். ராகோ.யோகேந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படம் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை நிறைய இடங்களில் ஞாபகப்படுத்துகிறது.  சச்சின் வாரியர் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், பின்னணிசையில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.  படத்தின் ப்ரொடக்ஷன் வேல்யூவும் நன்றாக இருந்தது.


படத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினை அனைவரது நடிப்பும் தான்.  சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரக்ஷன் வெள்ளி திரையில் ஜொலிக்க இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், நிறைய இடங்களில் தீனா இவரைத் தாண்டி தெரிகிறார். மேலும் இன்னும் அதிக நடிப்பு பயிற்சி ரக்ஷனுக்கு தேவைப்படுகிறது.  படத்தில் உள்ள நிறைய கதாபாத்திரங்களும் நடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.  இரண்டாம் பாதியில் தேவையே இல்லாத நிறைய காட்சிகளும் வந்து செல்கிறது.  பள்ளி கல்லூரி வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்த மறக்குமா நெஞ்சம் படம் உதவியாக இருக்கும்.


மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடரும் சண்டை! விசித்ராவால் வந்த பிரச்சனை..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ