ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக விளங்கும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு பலத்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய எபிசோடில் நடந்த சம்பவங்கள்..


நேற்றைய எபிசோடில் சக்தி அசோக்கிற்கு போன் செய்ய அவன் ஒரு ஆபத்தில் சிக்கியிருப்பதாக சொல்ல அதற்குள்  ரவுடிகள் போனை வாங்கி கட் செய்து விடுகிறார்கள். பிறகு சக்தி என்ன செய்வது என்று தெரியாமல் கோர்ட்டுக்குள் செல்ல வெற்றி, திடியன், கிரியை அழைத்து கூண்டில் ஏற்றுகிறார்கள். ஜட்ஜ் வெற்றியிடம் உனக்கு வக்கீல் இருக்கிறாரா என கேட்க அதற்குள் சக்தி வந்து நான் ஏற்பாடு செய்த வக்கீல் வர முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல அப்படியானால் 15 நாள் ரிமாண்ட் என தீர்ப்பு சொல்ல ஷக்தி ஜட்ஜின் முன்னால் நான்தான் அந்த கம்பளைண்ட் கொடுத்தேன், அதை வாபஸ் வாங்கி விட்டேன். 


ஆனால் இந்த இன்ஸ்பெக்டர் முன் விரோதம் காரணமாக வேண்டும் என்றே வெற்றியை கைது செய்து விட்டார் என்று ஆதாரங்களை காட்ட ஜட்ஜ் தைரியமாக கோர்ட்டில் பேசிய சக்தியை பாராட்டி வெற்றியை விடுதலை செய்கிறார். கோர்ட் வாசலில் ரங்கநாயகி ஏன் இதை நீ போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிருக்கலாமே என்று சக்தியிடம் கேட்க போலீஸ் ஸ்டேஷனில் சொல்லியிருந்தால் மீண்டும் வேறு ஏதாவது சொல்லி வெற்றியை கைது செய்து இருப்பார்கள். இப்போது அந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள் என்று கூறுகிறாள். 


மேலும் படிக்க | பாகுபலி நடிகருக்கு வில்லனாக கமல்? 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா..!


வெற்றியும் இதை நீ ஏன் முன்னாடியே செய்யவில்லை என்று கேட்க நீ இப்போதுதான் காலில் விழுந்தாய் அதனால் உன்னை காப்பாற்றினேன் என்று சொல்ல, நான் காலில் விழவில்லை என்று வெற்றி சொல்ல,  காலில் விழுந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் போய் கொண்டு இருக்கிறது என்று கூறி வீடியோவை காட்ட வெற்றி அதிர்ச்சியாகிறான். பிறகு சக்தி வெற்றிக்கு அவள் கொண்டு வந்த டிரஸ்சை கொடுக்க  நான் மானஸ்தன் என்று சொல்லி அதை வாங்கி கிழித்து போடுகிறான். இதையடுத்து இன்று நடக்கவிருக்கும் சம்பவங்கள் என்ன? வாங்க பார்க்கலாம். 



இன்றைய எபிசோட்:


மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் சக்தி கொடுத்த டிரஸ்சை வெற்றி கிழித்து எறிந்து விடுகிறான். பிறகு சாட்ஸுடன் மீனாட்சி மெஸ்ஸுக்கு வருகிறான். அங்கே சாட்சுடன் வெற்றியை பார்த்த சாந்தா வெட்கப்பட்டு வெற்றிக்கு டிரஸ் கொடுக்கிறாள். பிறகு மீனாட்சி வரும் விஷயத்தை சொல்ல வெற்றி சந்தோஷப்படுகிறான். மேலும் யமுனா, துர்கா, சக்தி, வெற்றி என அனைவரும் கல் கோயிலில் மீனாட்சி நல்ல முறையில் வீட்டுக்கு வர வேண்டும் என்று சாமி கும்பிடுகிறார்கள்.அதனை தொடர்ந்து நீதிமணி மீனாட்சியை பார்ப்பதற்காக புது டிரஸ் எல்லாம் அணிந்து கொண்டு பரபரப்பாக கிளம்ப அதை புஷ்பா பார்த்துவிட்டு நீதிமணியை திட்டுகிறாள். 


அஸ்தி..


மீனாட்சி வீட்டில் சாந்தா ஆரத்தி கலக்கி வைத்துக் கொண்டு மீனாட்சியை வரவேற்க காத்துக் கொண்டிருக்க ஒரு கார் வருகிறது. காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து இது மீனாட்சி வீடா என கேட்டு உறுதி செய்ய பிறகு மற்றொருவர் ஒரு அஸ்தி கலசத்தை கொண்டு வந்து கொடுக்க, சாந்தாவும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஒரு பையில் மீனாட்சியின் டிரஸ்ஸை கொடுத்துவிட்டு, மீனாட்சி ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார்கள் என்று கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.



காணத்தவறாதீர்கள்..


உண்மையாகவே மீனாட்சி இறந்துவிட்டாளா? அவளின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக இனி வரும் எபிசோடுகள் அமையவுள்ளது, இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ