Singer Bhavatharini Last Song : தமிழ் திரையுலகின், இசையுலக ஜாம்பவானாக இருப்பவர் இளையராஜா. இவரது இரண்டாவது மகள் பவதாரிணி, கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரை பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இந்த நிலையில், அவர் கடைசியாக செய்து கொடுத்த சேவை குறித்த செய்து தற்போது பெரிதும் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோயால் உயிரிழந்த பவதாரிணி!


இசை குடும்பத்தை சேர்ந்த பவதாரிணி, பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இவரது இனிமையான குரலில் வெளியான பாடல்கள் பல, இன்றளவும் பலருக்கு ஃபேவரட் ஆக இருக்கிறது. இந்த நிலையில்தான், இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இலங்கைக்கு, புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற இவர், சில நாட்களுக்குள்ளாகவே மிகவும் பாதிக்கப்பட்டார். 47 வயதே ஆன இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பிற்கு பிறகு, 2 நாட்களில் சொந்த ஊரில் இவரது உடல நல்லடக்கம் செய்யப்பட்டது. 


கடைசியாக செய்த நல்ல காரியம்!


பாடகி பவதாரிணி, தனது உடல் நிலை மோசமாக இருந்த நேரத்தில் கூட பாடல் பாடி கொடுப்பது, இசையமைப்பது போன்ற வேலைகளை செய்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம்” என்றும் கூறியிருக்கிறார். 



பெண்களுக்காக அவர் செய்திருக்கும் இந்த சேவையை பார்த்த மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க | Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!


பவதாரிணி கடைசியாக செய்த நற்செயல்..


பவதாரிணி, தனது சிகிச்சைக்காக இலங்கைக்கு செல்வதற்கு முன்பு குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஒரு செயலை செய்தார். தனது தந்தை இளையராஜா, தம்பி யுவன், அண்ணன் கார்த்திக் ராஜா உள்பட குடும்பத்தின் அனைவரையும் தனித்தனியே சந்தித்த இவர், அவர்களுக்கு பிடித்த விஷயங்களை பரிசாக வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்வித்திருக்கிறார். தனது நோயின் தீவிரத்தை அறிந்திருந்த அவர், இந்த காரியத்தை அறிந்திருந்ததாக கூறியிருக்கிறார். 


பவதாரிணி பாடிய பாடல்கள்..


பவதாரிணி, தனது தந்தையின் இசையிலும் தம்பியின் இசையிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பாக ‘ஒளியிலே தெரிவது தேவதையா..’ பாடலும் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு..’ பாடலும் ‘ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி..’ பாடலும் ஹிட் அடித்திருக்கின்றன. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் மனங்களில் ஒளித்துக்கொண்டே இருக்கும் பாடல் வகைகளுள் சிலதான் இவை. மன்னுலகை விட்டு மறைந்திருந்தாலும், தனது பாடல்கள் மூலம் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார், பவதாரிணி. 


மேலும் படிக்க | பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! என்ன செய்தார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ