இலங்கை, வங்கதேச சந்தைகளில் விற்பனை அதிகரிக்கும் சொகோமேக் நிறுவனம்...

சொகோமெக் இந்தியா நிறுவனம், இலங்கை மற்றும் வங்கதேச நாட்டிற்கான உத்திபூர்வ விரிவாக்கத் திட்டங்களை வெளியிட்டு, மேக் இன் இந்தியாவுக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 8, 2024, 10:47 PM IST
  • இலங்கை, வங்கதேச சந்தைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளன - சொகோமேக்
  • குறைந்த மின்னழுத்த (LV) மின்சக்தி நிர்வாகத்தில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது
  • இந்நிறுவனம் ஐந்து கண்டங்களில் பரந்து விரிந்துள்ளது.
இலங்கை, வங்கதேச சந்தைகளில் விற்பனை அதிகரிக்கும் சொகோமேக் நிறுவனம்...  title=

1922ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சொகோமெக் ஆனது, குறைந்த மின்னழுத்த (எல்வி) பவர் ஸ்விட்ச்சிங், கண்காணிப்பு மற்றும் பவர் கன்வெர்ஷன் தயாரிப்புகளில் உலகளாவிய புகழ்பெற்ற நிபுணத்துவம் கொண்ட நிறுவனம் ஆகும், இது மின்சக்தியை நிர்வகிப்பதற்கும் மக்கள், உபகரணங்கள் மற்றும் நிறுவல்களைப் பாதுகாப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. 24/7 நிபுணத்துவ சேவைகளை வழங்கும், சொகோமெக், இறுதி பயனர்களின் சாதனங்களின் நம்பகத்தன்மை மற்றும் மேம்படுத்தலை உறுதி செய்கிறது.

ஐந்து கண்டங்களில் பரந்து விரிந்து, 3900 பணியாளர்கள், 12 உற்பத்தித் தளங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட சொகோமெக் குழுமம் மின்சக்தி துறையில் முக்கிய பங்காற்றும் நிறுவனம் ஆகும். சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள சொகோமெக் இந்தியா, ஹரியானாவின் குருகிராமில் ஒரு அதிநவீன உற்பத்தி வசதியுடன் நாடு முழுவதும் 12 இடங்களில் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | நான் படிச்ச காலத்தில...! மாணவர் பருவத்தை நினைவுகூர்ந்த தமிழ்நாடு ஆளுநர்...

குறைந்த மின்னழுத்த (LV) மின்சக்தி நிர்வாகத்தில் முன்னணியில் உள்ள உலகளாவிய நிபுணத்துவம் கொண்ட நிறுவனமான சொகோமெக் இந்தியா, தன் பெருவிருப்பமான விரிவாக்கத் திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பிரெஞ்சு மின்சக்தி நிலையம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் சந்தைகளில் உடனடியாக களமிறங்குகிறது. 

'கிரேட்டர் இந்தியா' என அழைக்கப்படும், இந்த உத்திபூர்வ நடவடிக்கையானது மூன்று நாடுகளையும் ஒருங்கிணைந்த வணிக அமைப்பாக ஒருங்கிணைக்கிறது, இது சொகோமெக் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது மற்றும் வணிக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது.
 
சொகோமெக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மீனு சிங்கல் இந்த விரிவாக்கம் குறித்து பேசுகையில், "ஆசிய சந்தையில் புதுமையான மின்சக்தி தீர்வுகள் மூலம் வளரும் மின்சக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாததாக உள்ளது. ஐரோப்பாவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் பெருமையுடன் உற்பத்தி செய்யப்படும் எங்கள் தயாரிப்புகள் இலங்கை மற்றும் பங்களாதேஷ் சந்தைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளன. 

ஆத்மநிர்பர் பாரத் முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டிற்கு சக்தியளிப்பதற்குமான எங்களின் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது, அதே சமயம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சொகோமெக்கின் உத்திபூர்வ வளர்ச்சிக்கான முக்கிய மையமாக இந்தியா செயல்படும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கான எங்களது அர்ப்பணிப்பையும் இது உறுதிப்படுத்துகிறது. 

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் INDIA vs NDA... யாருக்கு அதிக ஆதரவு - வெளியான புதிய சர்வே!

உலகளாவிய தரத்துக்கான இயல்தரங்களை நாங்கள் கடைபிடிப்பதானது இந்தப் பயணத்தில் நாங்கள் எளிதாக வழிசெலுத்திச் செல்லும் நிலையில் எங்களை வைக்கிறது. தொழில்துறையில் நம்பகமான தலைமைதாங்கும் நிறுவனமாக சொகோமெக்கின் நிலையை மேலும் வலுப்படுத்தி, நிலைத்தன்மையான மற்றும் திறம்பட்ட மின்சக்தி தீர்வுகள் மூலம் நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்குவதையும் வணிகங்களை மேம்படுத்துவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய சந்தையில் சொகோமெக் குழுமத்தின் சமீபத்திய 5  மில்லியன் ஐரோப்பிய டாலர் முதலீட்டில், உள்ளூர் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் ஏற்றுமதி மூலம் இலங்கை மற்றும் வங்கதேச சந்தைகளையும் இலக்காக கொண்டுள்ளது.
 
சொகோமெக் இந்தியா, தடையில்லா மின்சாரம், மின்சக்தி நிலைமாற்றுதல் மற்றும் கண்காணிப்பு தீர்வுகள் உள்ளிட்ட புதுமையான மின்சக்தி தீர்வுகள் மூலம் நாட்டுக்கு சக்தி அளிக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தத் தயாரிப்புகள் தரவு மையங்கள், உற்பத்தி மற்றும் செயலாக்கத் தொழில்கள், சுகாதாரம், உள்கட்டமைப்பு, வணிகக் கட்டடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 

உள்நாட்டில் தன் இருப்பை மையமாக வைத்துக்கொண்டு, இந்த தயாரிப்பு வகைகள் இப்போது இலங்கை மற்றும் வங்கதேசம் சந்தைகளில் கிடைக்கும்படி செய்யப்படும். இந்த விரிவாக்கத்தின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த பிராந்தியங்களில் தனது வருவாயை இரட்டிப்பாக்க சொகோமெக் இந்தியா இலக்கு கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி

இந்த பெருவிருப்பமான வளர்ச்சித் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் வளர்ந்து வரும் சந்தைகளில் நிறுவனத்தின் முன்முயற்சிகளை வழிநடத்தும் பணியைச் செய்ய பொது மேலாளராக சுஹார்ட் அமித் நியமிக்கப்பட்டதை சொகோமெக் பெருமையுடன் அறிவிக்கிறது. 

சொகோமெக் இந்தியா இந்த அற்புதமான விரிவாக்கப் பயணத்தைத் தொடங்குகையில், நிறுவனம் மின்சக்தி நிர்வாகத்தில் சிறப்புகளையும் புதுமைகளையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது. நிலைத்தன்மையான தீர்வுகள் மற்றும் சிறந்த தரத்திற்கான அர்ப்பணிப்பு இலங்கை மற்றும் வங்கதேசத்தில் உள்ள வணிகங்களுக்கு நன்மை பயக்கும், அத்துடன் இந்த பிராந்தியங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும். 

இந்த நடவடிக்கையானது, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (SAARC) முன்முயற்சிக்கு பரந்த அளவில் பங்களிக்கிறது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. 'கிரேட்டர் இந்தியா' தொலைநோக்கு பார்வையானது, எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சார்க் நாடுகளுக்குள் ஒத்துழைப்புக்கான வேகப்படுத்தும் சக்தியாக சொகோமெக்கை நிலைநிறுத்துகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது -அதிமுக ஆர்.பி.உதயகுமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News