இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டாவது மகள் பவதாரிணி, கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், பவதாரிணியின் கடைசி ஆசை ஒன்றை அவரது தந்தை இளையராஜா நிறைவேற்றி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பறந்து போன பாட்டுக்குயில்..
இசை குடும்பத்தை சேர்ந்த பவதாரிணி, தற்போது வரை பல பாடல்கள் ஹிட் ஆனதற்கு காரணமாக உள்ளார். இவரது இனிமையான குரலுக்கென பல கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர். ஒரு பக்கம் தனது தந்தையின் படங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடல் பாடி வந்த பவதாரிணி, இன்னொரு பக்கம் தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் சில பாடல்களை பாடி வந்தார். அழகி படத்தில் வரும் ‘ஒளியிலே தெரிவது தேவதையா..’ பாடல் முதல், தற்போதுள்ள குழந்தைகளுக்கு தெரிந்த ‘ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்கார்’ பாடல் வரை இவரது இனிமையான குரல் எப்போதும் இவரது ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இலங்கை, கொலம்போ என்ற இடத்தில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக பவதாரிணி சென்றார். அங்கு திடீரென்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 47 வயதில் இவர் உயிர் பிரிந்ததை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
உடல் நல்லடக்கம்:
பவதாரிணி ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து, இவரது உடல் அதன் பிறகு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், பவதாரிணியின் உடல் அஞ்சலி செலுத்தப்படுவதற்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, அவரது உடலை உறவினர்கள் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்சென்றனர். அங்கு அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடைசி ஆசை:
பவதாரிணி தனது சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்ற போது, அவருக்கு அங்கு உதவியாக இருந்த ஒருவர் ஊடக தளங்களுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் பவதாரிணி உயிரிழப்பதற்கு முன்னர் செய்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இளையராஜா, இலங்கையில் கடந்த மாத இறுதியில் இசை நிகழ்ச்சி நடத்த இருந்தார். அப்போது, அங்கு சிகிச்சையில் இருந்த பவதாரிணி, தந்தையை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாராம். அப்போது, பவதாரிணி தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் இளையராஜாவிற்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இளையராஜா, தனது மகளுடன் அவர் இறப்பதற்கு முந்தைய நாள் 2 மணி நேரம் செலவிட்டுள்ளார். அதன் பிறகுதான் பவதாரிணி உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
குடும்பத்தினருக்கு பரிசு..
பாடகி பவதாரிணி, தனது இறப்பை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. தான் இலங்கைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு அவர் தந்தை இளையராஜா, தம்பி யுவன் சங்கர் ராஜா, அண்ணன் கார்த்திக் ராஜா, உறவினர்களான கங்கை அமரன், பிரேம் ஜி, வெங்கட் பிரபு உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்தித்துள்ளார். அது மட்டுமன்றி அனைவருக்கும் பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். தனக்கு வந்திருக்கும் புற்றுநோய் குறித்த தீவிரத்தை அறிந்த அவர், இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ