தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். இவர் கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இரஞ்சித் விக்ரமை வைத்து படத்தை இயக்குகிறார். இந்தப் படமானது பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாக இருக்கிறது. வரிசையாக கமிட்டாகியிருக்கும் இரஞ்சித் மாறுபட்ட களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்


இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.


 



வழக்கமாக பணியாற்றும் குழுவோடு இல்லாமல் புதிய தொழில்நுட்ப குழுவோடு களமிறங்கியிருக்கிறார் பா.இரஞ்சித். அதன்படி டென்மா என்பவர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.


 



படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 6ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார். அதன்படி, படமானது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Love is Political - வெளியானது நட்சத்திரம் நகர்கிறது ஃபர்ஸ்ட் லுக்


மேலும் படிக்க | பிசாசு -2 படத்தில் ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகள் நீக்கம்!


மேலும் படிக்க | டாப் கியரில் எகிறும் சிவகார்த்திகேயனின் மாஸ்! அடுத்த படத்தில் சங்கர் மகளுடன் ரொமான்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ