Love is Political - வெளியானது நட்சத்திரம் நகர்கிறது ஃபர்ஸ்ட் லுக்

பா.இரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 6, 2022, 06:19 PM IST
  • நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியிருக்கிறார் பா. இரஞ்சித்
  • முழுக்க முழுக்க காதல் படமாக இது உருவாகியுள்ளது
Love is Political - வெளியானது நட்சத்திரம் நகர்கிறது ஃபர்ஸ்ட் லுக் title=

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். இவர் கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இரஞ்சித் விக்ரமை வைத்து படத்தை இயக்குகிறார். இந்தப் படமான பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாக இருக்கிறது.

இதற்கிடையே அவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க இருக்கிறார். மேலும், சமீபத்தில் இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தின் லுக் வெளியிடப்பட்டது.

Pa Ranjith

வரிசையாக கமிட்டாகியிருக்கும் இரஞ்சித் மாறுபட்ட களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

 

வழக்கமாக பணியாற்றும் குழுவோடு இல்லாமல் புதிய தொழில்நுட்ப குழுவோடு களமிறங்கியிருக்கிறார் பா.இரஞ்சித். அதன்படி டென்மா என்பவர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

 

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | இத்தனை தியேட்டர்களா?... பிரமாண்டமாக வெளியாகிறது தி லெஜண்ட் - வாய் பிளக்கும் கோலிவுட்

அதனை இயக்குநர் பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் படம் வெளியாகவிருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | எங்களிடமிருந்து வருவதுதான் அதிகாரப்பூர்வ செய்திகள் - விஜய் மக்கள் இயக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News