திருமணத்திற்கு பிறகு நயன்தாரா போட்ட கண்டிஷன்!
திருமணத்திற்கு பின்னர் தான் படத்தில் இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா கண்டிஷன் போட்டுள்ளாராம்.
சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருந்தது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் தான். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். முக்கியமான பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு இந்த நட்சத்திர ஜோடி கோவில்களுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர், சமீபத்தில் நயன்தாரா கேரளாவிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஜோடியாக பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வாந்தார்கள்.
மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!
அதனைத்தொடர்ந்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஹனிமூனுக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் பட வேலைகளை மீண்டும் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, திருமணத்திற்கு பிறகு தான் படத்தில் எந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா இரண்டு கண்டிஷன்களை போட்டுள்ளாராம். முதல் கண்டிஷனாக படத்தில் கதாநாயகனுடன் முத்த காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், இரண்டாவது கண்டிஷன் படத்திற்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்கமாட்டேன் என்று கூறியுள்ளாராம்.
தற்போது நயன்தாரா பாலிவுட்டில் அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதனையடுத்து நயன்தாரா நடித்து முடித்துள்ள 'O2' திரைப்படம் ஜூன்-17ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து இயக்கப்போகும் 'ஏகே62' படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கவிருக்கிறார்.
மேலும் படிக்க | அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்! காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR