ராணி வேலு நாச்சியாராக அவதாரம் எடுக்கப்போகிறாரா Lady Superstar Nayanthara?
ராணி வேலு நாச்சியார் 1780 முதல் 1790 வரை சிவகங்கை எஸ்டேட்டின் ராணியாக இருந்தார். தமிழர்களால் வீரமங்கை என்று அழைக்கப்படும் இவர், கிழக்கு இந்திய கம்பனியை எதிர்த்து போர் புரிந்த முதல் இந்திய ராணி ஆவார்.
வரலாற்று திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டி வருகின்றன. தற்போது மணி ரத்னத்தின் பொன்னியன் செல்வன் தயாரிப்பில் உள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் அதிக அளவிலான எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது சமீபத்திய செய்தி என்னவென்றால், இயக்குனர் சூசி கணேசன் ராணி வேலு நாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளார்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில், வேலு நாச்சியாராக நயன்தாரா நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. ராணி வேலு நாச்சியார் 1780 முதல் 1790 வரை சிவகங்கை எஸ்டேட்டின் ராணியாக இருந்தார். தமிழர்களால் வீரமங்கை என்று அழைக்கப்படும் இவர், கிழக்கு இந்திய கம்பனியை (East India Company) எதிர்த்து போர் புரிந்த முதல் இந்திய ராணி ஆவார்.
தெலுங்கு வரலாற்று படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் நயந்தாரா (Nayanthara) நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதாரண வசூலையே பெற்றது. இருப்பினும், சமீபத்தில் OTT இல், நயந்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களின் பணிகளில் பிஸியாக உள்ளார். இதில் ரஜினிகாந்தின் அண்ணாத்த, நெற்றிக்கண் மற்றும் காதுவாகுலா ரெண்டு காதல் ஆகியவையும் அடங்கும்.
இதற்கு முன்னர் சூசி கணேசன் (Susi Ganesan) திருட்டுப்பயலே 2 படத்தை இயக்கி இருந்தார். அவரது வெற்றிகரமான திரைப்படமான திருட்டுப்பயலேவின் தொடர்ச்சியாக இப்படம் வெளிவந்தது. தற்போது வேலு நாச்சியார் திரைப்படத் தயாரிப்பாளரின் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், இந்த திட்டம் அதிக பரிசீலனையில் உள்ளது என்றும், நடிகர் தேர்வு மற்றும் பட்ஜெட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் - வைரலாகும் புகைபடம்!
சமீபத்திய ஆண்டுகளில், வாழ்க்கை வரலாறு மற்றும் வரலாற்று திரைப்படங்கள் அதிகமாக வெளிவருகின்றன. மக்களிடம் இவற்றைப் பார்ப்பதற்கான ஆர்வமும் அதிகரித்து வருகின்றது. பாகுபலி 1, பாகுபலி 2, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி, மணி கர்ணிகா, ருத்ரமாதேவி, தான்ஹாஜி என பல்வேறு இந்திய மொழிகளில் பல்வெறு வரலாற்று படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும், ஒரு காலத்தில் புராண மற்றும் வரலாற்று திரைப்படங்களுக்காக அறியப்பட்ட தமிழ் சினிமாவில் வரலாற்று படங்களுக்கான தட்டுப்பாடு உள்ளது என்றே கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் 2014 இல் வெளி வந்தது. அதன் பிறகு இந்த பிரிவில் பிரத்யேகமான தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தின் வீர மங்கை வேலு நாச்சியாரின் (Velu Nachiyar) வாழ்க்கை படமாக வருமானால் அது கண்டிப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ALSO READ: Rajinikanth டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் அரசியலில் நுழைவது கானல்நீரா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR