ஜெயிலர் 2 திரைப்படத்தின் அப்டேட் : ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்சன் திலீப்குமார்..
டார்க் காமெடி படங்களை இயக்கி வெற்றி இயக்குநர்களின் பட்டியிலில் இடம் பெற்றவர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு காேகிலா, டாக்டர் போன்ற படங்களில் இவருக்கு கைக்கொடுத்த இந்த வித்தியாசமான கதை பாணி, கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தில் கழட்டி விட்டுவிட்டது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் இப்படத்தை நெகடிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் வருத்தெடுத்தனர். இதையடுத்து, நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்கி வந்தார். இந்த படம் என்னாகுமோ என பயந்த ரசிகர்கள் பெருமூச்சு விடும் வகையில் அவர்களை ஏமாற்றாமல் நேர்த்தியான கதையை கொடுத்திருந்தார், இயக்குனர் நெல்சன். 


ஜெயிலர் திரைப்படம்: 
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் பல பான் இந்திய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் இதில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தனர். ரஜினியின் மகன் வேடத்தில் விஜய் வசந்தும், மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது, அதனுடன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் 700 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Director Pa Ranjith: “#நன்றி கெட்ட ரஞ்சித்” இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! என்ன விஷயம்?


​ஜெயிலர் 2 டைட்டில்
இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி மற்றும் நெல்சன் இருவரும் ஜெயிலர் 2 படத்திற்காக மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினி லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜெயிலர் 2 படத்திற்கு ஹுக்கும் (Hukum) என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் மாஸ் ஹிட்டடித்ததை தொடர்ந்து இதையே ஜெயிலர் 2 படத்திற்கு டைட்டிலாக வைக்கலாம் என நெல்சன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


வேட்டையன்:
இதனிடையே தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் என்கிற படத்தில் நடித்து வருகின்றார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத்தின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மேலும் இம்மாதம் இறுதிக்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையக் கூடும் என்றும், அக்டோபர் மாதத்தில் இப்படம் திரையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Dhanush: தனுஷின் தந்தை என வழக்கு போட்ட கதிரேசன் காலமானார்... கடைசி காலத்தில் பட்டினியால் வாடிய சோகம்


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ